ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ...
Read More »செய்திமுரசு
தேசியப் பட்டியல் பதவி யாருக்கு? வீட்டுக்குள் வெடித்தது பூகம்பம்!
பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு ஆரம்பமானபோதே, தேசியப்பட்டியல் குறித்த சர்ச்சை கூட்டமைப்புக்குள் ஆரம்பமாகிவிட்டது. அம்பிகாவா?, கே.வி.தவராஜாவா?, திருமலை குகதாசனா? என ஆரம்பமான அந்த சர்ச்சை இப்போது சசிகலாவா? கலையரசனா? மாவையா என்ற கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் கேள்விக்குப் பதில் காணவேண்டும் என்பதால் அடுத்த மூன்று நாட்களும் வீட்டுக்குள் பூகம்பம்தான்! கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்தது. ஆனால், இந்த முறை ஒன்றுதான் கிடைக்கும் என்பது முன்னரே ஊகிக்கப்பட்டிருந்தமையால் போட்டி கடுமையாக இருந்தது. தேசியப் பட்டியல் மூலமாக வருவதற்கு ...
Read More »ஆவா குழுவின் அச்சுறுத்தலால் முன்னணியின் மக்கள் சந்திப்பு நிறுத்தம்!
இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. புலனாய்வாளர்களின் பின்புலத்தை கொண்ட ஆவா குழு வாள்களைக் காட்டி மிரட்டி, கதிரைகளை அடித்து உடைத்ததால் குறித்த மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி ருவிட்டர் பதவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
Read More »‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறும்: ஆஸ்திரேலியா நம்பிக்கை
மைதானத்துக்குள் ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்றால் நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது. மெல்போர்னை உள்ளடக்கிய விக்டோரியா மாகாணத்தில் ...
Read More »ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய கருணையின் அடிப்படையில் அனுமதி
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள உடல்நலப் பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியிருந்த 31 வயது சய்தரா சங்கர், கடந்த மார்ச் 20ம் தேதி கொரோனா சூழல் காரணமாக ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டதால் ஆஸ்திரேலிய திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தடைக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக் கொண்டவர்களும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைக் கொண்டவர்களும் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா பெற்ற சய்தரா சங்கர் ஆஸ்திரேலியா திரும்ப அனுமதிக்கப்படவில்லை. “தனது கணவனிடமிருந்து நான்கு வயது மகனிடமிருந்தும் பிரிந்திருப்பதை ...
Read More »நியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை
நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என அரசு அறிவித்துள்ளது. உலகளவில் இதுவரை 1,98,11,817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,29,661 பேர் உயிரிழந்துள்ளனர். வளர்ந்த பொருளாதாரமும், வலுவான சுகாதார கட்டமைப்பும் உள்ள நாடுகள் கூட கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததையடுத்து, நியூசிலாந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு வருபவர்கள் சிலருக்கு தொற்று உறுதியாகிறது. ஆனால் அவர்கள் ...
Read More »திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்
தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால் அவர்களுக்கு வடக்கு கிழக்கிலுள்ள அவர்களுடைய நண்பர்களும் இணைந்தால்தான் முடியும். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்தேசிய வாக்குத் தளத்தை உடைத்து அதிலிருந்து ஒரு தொகுதி வாக்குகளை மறைமுகமாக தாமரை மொட்டுக்குப் பெற்றுக் கொடுத்த வடக்கு-கிழக்கு மைய கட்சிகளும் இணைந்து தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குகின்றன.அப்படி என்றால் தமிழ் மக்களின் ...
Read More »சிறிலங்கா காவல் துறை அதிகாரிகள் மீது கைக்குண்டு வீச முயன்றவர் கைது
காவல் துறை உத்தியோகஸ்தர்கள் மீது கை குண்டை வீசி விட்டு தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை வெல்லவாய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உளவுத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல்களின் படி, வெல்லவயா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில் ஒருவரைப் பிணையில் கைது செய்வதற்காக வெல்லவயா காவல் துறை அதிகாரிகள் வெல்லவாய கம் பங்குவ பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது குறித்த சந்தேகநபர் கைக் குண்டு ஒன்றை வீசி விட்டு தப்பி ஓட முயற்சித்ததாக காவல் துறை ஊடகம் தெரிவித் துள்ளது. இருப்பினும் குறித்த கைக்குண்டு வெடிக்க ...
Read More »கூட்டமைப்பின் தேசியப் பட்டில் உறுப்பினராக கலையரசன்
கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் மட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர் முன்பாக இதனை அறிவித்தார்
Read More »அவுஸ்ரேலியாவில் 10 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிப்பு
ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கத்திற்கு இடையில், தற்காலிக விசாவில் அந்நாட்டிலுள்ள சுமார் 10 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசால் வழங்கப்படும் JobKeeper மற்றும் JobSeeker போன்ற உதவித்திட்டங்களிலும் இத்தொழிலாளர்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர், வேலைக்காக வந்த 470 விண்ணப்பங்களில் இரு விண்ணப்பங்கள் மட்டுமே ஆஸ்திரேலியர்களிடம் இருந்து வந்ததாகக் குறிப்பிடும் அளவிற்கு அங்கு தற்காலிக விசாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை மோசமானதாக இருக்கின்றது. அதாவது சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வேலைக்கான விண்ணப்பங்கள் தற்காலிகமாக அங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களால் ...
Read More »