காவல் துறை உத்தியோகஸ்தர்கள் மீது கை குண்டை வீசி விட்டு தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை வெல்லவாய காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உளவுத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல்களின் படி, வெல்லவயா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில் ஒருவரைப் பிணையில் கைது செய்வதற்காக வெல்லவயா காவல் துறை அதிகாரிகள் வெல்லவாய கம் பங்குவ பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது குறித்த சந்தேகநபர் கைக் குண்டு ஒன்றை வீசி விட்டு தப்பி ஓட முயற்சித்ததாக காவல் துறை ஊடகம் தெரிவித் துள்ளது.
இருப்பினும் குறித்த கைக்குண்டு வெடிக்க வில்லை என்றும்,
குறித்த சம்பவத்தில் 32 வயதான வெல்லவாயப் பகுதி யைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பியோடி யவர் என காவல் துறை விசாரணையிலிருந்து தெரியவந்துள் ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல் துறையினர் மேற் கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal