செய்திமுரசு

சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகொள்ளும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியிலும் எழுச்சிபூர்வமாக நினைவுகூரப்பட்டது. வெள்ளிக்கிழமை 27-11-2020 மாலை 5.45 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு Blacktown Bowman Hall எனும் மண்டபத்தில் நடைபெற்றது. பொதுச்சுடரினை மட்டுநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட, 1998 மே 23ஆம் நாள் வீர காவியமாகிய சண்முகம் சந்திரறோகான் என அழைக்கப்படும், கப்டன் புவிராஜ் அவர்களது சகோதரி சந்திரப்பிரபா பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை அவுஸ்திரேலிய அரசியல் களத்தில் செயற்பட்டுவருபவரும் தமிழர் ...

Read More »

விடுதலை வீரர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள்

“தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.” தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்

Read More »

மன்னாரில் இடம் பெற்ற மாவீரர் நினைவேந்தல்

மன்னாரில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது. இதன் போது மாலை 6.05 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் மாவீரர் நினைவேந்தல் நடாத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்களை ...

Read More »

சீனசார்புப் போக்கு சிங்களதேசத்தையும் அழிக்கும்

தமிழர்களின் உரிமையைகளை மறுதலிப்பதற்காக நீங்கள் இந்த பூகோள அரசியல் போட்டியை கையாளும் தவறான அணுகுமுறையானது, எந்த மக்களின் பெருமிதத்திற்காக நீங்கள் இதை செய்கிறீர்களோ அதே உங்களின் சொந்தமக்களின் இறைமையையும் நீங்கள் அழித்துக்கொள்கிறீர்க்ள் என்பதை மீண்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்று நீஙக்ள் இனவாதத்தை கைவிட்டு, நீஙக்ள் நாட்டின் தென்பகுதியில் நீங்கள் கொண்டிருக்கும் உரித்துகளை போலவே தமிழ் மக்களும் வடக்கு கிழக்கில் அனைத்து உரித்துகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுகொண்டு இணைந்து செய்ற்பட முன்வருகிறீர்களோ, அன்றுதான் , இலங்கையில் வசிக்கும் அனைவரும் நன்மையடையக்கூடிய வகையில் அனைவரும் இணைந்து ...

Read More »

மாவீரர் நினைவேந்தல் வழக்கு நீதிமன்றால் நிராகரிப்பு

கொக்கட்டிச்சோலை காவல் துறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவுக்கு எதிராக நீதின்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தொடுத்த வழக்கை இன்று வியாழக்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நிராகரித்ததுடன் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலை நடத்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை கார்த்திகை 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவடிமுன்னமாரி துயிலும் இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் விளக்கேற்ற உள்ளதாகவும் இந்த நிகழ்வு இடம்பெறும் இடத்தில் ...

Read More »

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 144 பேர் கொவிட்-19 தொற்றாளர்கள்

கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப் படுத்தப்பட் டுள்ளனர். இந்நிலையில் அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.   மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 13 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...

Read More »

ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா இருந்து வந்தார். ஐ.சி.சி. புதிய தலைவர் தேர்தல் குறித்து பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டாலும் ஒருமித்த முடிவு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கு வேட்பு ...

Read More »

ஆஸ்திரேலியா: நோய்வாய்பட்ட மனைவியை சந்திக்க அகதிக்கு அனுமதி மறுப்பு

மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திப்பதற்கான அனுமதியை ஆஸ்திரேலிய எல்லைப்படை மறுத்து வருவதாக ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள சோமாலிய அகதி சயப் அலி சயப் குற்றம் சாட்டியிருக்கிறார். கடந்த ஓராண்டில் மூன்று அறுவை சிகிச்சை செய்துள்ள அவரது மனைவியை காண ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என எழுத்துப்பூர்வமாக எவ்வித மறுப்பும் வழங்கப்படவில்லை என சயப் கூறுகிறார். ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையைச் சேர்ந்த ஒரு ஊழியர் தன்னை பார்வையிட்டு, “கொரோனா சூழல் காரணமாக உங்களது மனைவியை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை,” எனக் கூறியதாக சயப் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

முக்கியமான வாய்ப்பை தவறவிட்ட இந்தியா

உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கும் ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை’ உடன்படிக்கை சீனா தலைமையில் ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தைச் சேர்ந்த 10 நாடுகளும் சேர்ந்து 15 நாடுகளைக் கொண்ட ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை (Regional Comprehensive Economic Partnership –RCEP trade deal) உடன்படிக்கையொன்று நவம்பர் 15 கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலமாக உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்று தோற்றம் பெற்றிருக்கிறது. இதில் இந்தியா பங்கேற்காதமை பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 7 ...

Read More »