மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திப்பதற்கான அனுமதியை ஆஸ்திரேலிய எல்லைப்படை மறுத்து வருவதாக ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள சோமாலிய அகதி சயப் அலி சயப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
கடந்த ஓராண்டில் மூன்று அறுவை சிகிச்சை செய்துள்ள அவரது மனைவியை காண ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என எழுத்துப்பூர்வமாக எவ்வித மறுப்பும் வழங்கப்படவில்லை என சயப் கூறுகிறார்.
ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையைச் சேர்ந்த ஒரு ஊழியர் தன்னை பார்வையிட்டு, “கொரோனா சூழல் காரணமாக உங்களது மனைவியை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை,” எனக் கூறியதாக சயப் குறிப்பிட்டுள்ளார்.