இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் ...
Read More »செய்திமுரசு
வத்தளை தமிழ் பாடசாலை : ஜூலை 12 ஆம் திகதி அங்குரார்ப்பணம்!
கம்பஹா மாவட்ட வத்தளை தமிழ் பாடசாலை ஜூலை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வத்தளை ஹுணுபிட்டியவில் அங்குரார்ப்பணம் செய்யப்படும். நன்கொடையாளர்கள் மாணிக்கவாசகம் குடும்பத்தினரால் வழங்கப்பட்டுள்ள காணியில் தற்சமயம் இருக்கும் கட்டிடத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். ரூபா. 78 மில்லியன் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய நான்கு மாடிப் பாடசாலை கட்டிடத்துக்காக, முதற்கட்டமாக எனது அமைச்சிலிருந்து ரூபா 27 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை இன்று கையெழுத்திட்டுள்ளேன். இதற்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நாட்டப்பட்டு கட்டிட பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணி,- தமிழ் முற்போக்கு ...
Read More »உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி !
டென்மார்க்கில் உள்ள உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான மற்றும் பயன்பாட்டில் உள்ள கொடியினை பாதுகாத்து, அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது. டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பென்கன்னில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ளது வாடின்போ. இங்கு உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கொடி உருவாக்கப்பட்டு, 800 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தையொட்டி விழா நடைப்பெற்றது. இந்த விழா அரசு முறைப்படி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர். அப்பகுதியில் உள்ள மிக உயரிய கம்பத்தில் ...
Read More »இந்து சம்மேளனத்தின் தலைவர் நான்காம் மாடியில் ….!
இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்கியிருந்தார். இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் பல்வேறு காணொளி ஆதாரங்களை வெளியிட்டார். பேட்டியில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினால் கோரப்பட்டதற்கிணங்க, அருண்காந்த் நேற்று திங்கட்கிழமை ஆஜராகி சாட்சியம் வழங்கினார். அதன்படி காலை 9 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, காணொளி ...
Read More »ரணிலின் அரசியல் எதிர்காலம்!
இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் கட்சியொன்றின் தலைவராக மிகவும் நீண்டகாலம் தொடர்ச்சியாக இருந்து வருபவர் என்றால் அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக அவர் சுமார் கால் நூற்றாண்டாக பதவி வகித்து வருகிறார். அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களில் எவரும் பிரதமர் விக்கிரமசிங்கவைப்போன்று தலைமைத்துவத்துக்கு எதிரான உள்கட்சி கிளர்ச்சிகளுக்கு அடிக்கடி முகங்கொடுத்ததில்லை. ஆனால், அந்த கிளர்ச்சிகளை முறியடித்து தலைவர் பதவியை அவரால் காப்பாற்றக்கூடியதாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் அரசியல்வாதிகளில் கூடுதலான காலமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரே ...
Read More »பால் மா கலப்படம்: அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!
விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் விற்கப்படும் குறிப்பிட்ட சில பால் வகைகளில் சுத்திகரிப்பு திரவம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் 8 வகையான பால் வகைகள் திரும்பப்பெறப்படுவதாகவும் பால் கொள்முதல் செய்யும்போது கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள Coles, Woolworths, IGA உள்ளிட்ட பிரபல அங்காடிகள் மற்றும் எனைய இடங்களில் விற்பனையாகும் பால் வகைகள் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு திரவம் கலந்துள்ளதாக நம்பப்படும் இந்தப்பால் மஞ்சள் நிறமாக தெரியும் அல்லது ...
Read More »அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கூட்டமைப்பு ?
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும், கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நாளை கூடி ஆராயவுள்ளது. அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நிலையில் அந்த பிரேரணை அடுத்த மாதம் 9-10ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தத்தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆராயவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நாளை நண்பகல் நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ள நிலையில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நோய்!
இளம்பெண் ஒருவர் தமது நகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய்க்கு இரையாகியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தோல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானதால் அவரது கட்டைவிரல் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் கர்ட்னி வித்தோர்ன் என்பவர் பாடசாலையில் சக மாணவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான பின்னர் நகம் கடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த பழக்கம் ஒருகட்டத்தில் இவரது கட்டைவிரலில் உள்ள நகம் மொத்தமும் கடித்தே துப்பியுள்ளார். இந்த நிலையில் தமது கட்டைவிரல் கருமையாக ...
Read More »ஓய்வூதியச் சம்பளம் அதிகரிப்பு!
ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிகாரம், ஆகக்குறைந்தது 2,800 ரூபாயும் கூடியது 20 ஆயிரம் ரூபாயும் கிடைக்குமென, நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால், 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், ஓய்வூதிய சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டு, ஓய்வூதியக் கொடுப்பனவுகள், ஜூலை மாதம் முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2015.12.31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுகின்ற 500,000 பேருக்கு இந்த ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »ஒரே திசைக்கு தொடுக்கப்படும் அம்புகள்!
எமக்கு நேரவிருக்கும் இழப்புகளிலிருந்து எம்மை காத்துக்கொள்வதையே பாதுகாப்பு என்கிறோம். அந்த வகையில், உயிர்ச் சேதங்கள்,சொத்துச் சேதங்கள் உள்ளிட்ட பலவாறான சேதங்களை முன்பே அறிந்து, அதற்குத் தடைக்கல் போடுவதையே பாதுகாப்புச் செயன்முறையாகக் கருதமுடியும். இந்தப் பாதுகாப்புச் செயற்பாடுகளின் பரப்பு விரிவடைந்து செல்லும்போது, தேசிய பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, பௌதீக வளங்களின் பாதுகாப்பு என்று பல கோணங்களில் பார்க்கப்படுகிறது. இவற்றில், பிரதான கட்டமைப்பாக, தேசியப் பாதுகாப்பைக் கருதலாம். தேசிய பாதுகாப்பு என்ற விடயத்துக்குள், பொதுமக்களின் பாதுகாப்பு, அரச பாதுகாப்பு உட்பட முழு நாட்டினதும் பாதுகாப்பும் உள்ளடங்கும். தேசிய ...
Read More »