ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிகாரம், ஆகக்குறைந்தது 2,800 ரூபாயும் கூடியது 20 ஆயிரம் ரூபாயும் கிடைக்குமென, நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால், 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், ஓய்வூதிய சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டு, ஓய்வூதியக் கொடுப்பனவுகள், ஜூலை மாதம் முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் 2015.12.31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுகின்ற 500,000 பேருக்கு இந்த ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.