ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் விவகாரம் தொடர்பில் முழுமையாக விசாரிக்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகள் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்துள்ளார். பாதுகாப்பு கருதியே அவர்கள் தடுப்பு முகாமிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதை நிராகரித்துள் பிரியா, “இது சுத்த பொய். நாங்கள் தடுப்பு முகாமிற்குள் தான் வைக்கப்பட்டுள்ளோம். தடுப்புச்சுவரை தாண்டி வெளியே ...
Read More »செய்திமுரசு
பயண தடை விதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர்!
பாக்கிஸ்தானின் பிரபல பெண் மனித உரிமை ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் பல மாதங்கள் தலைமறைவாகயிருந்த பின்னர் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுள்ளார். குலாலாய் இஸ்மாயில் அரசஎதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் வன்முறைகளை தூண்டுகின்றார் என தெரிவித்திருந்த பாக்கிஸ்தான் அரசாங்கம் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்திருந்தது. இந்;நிலையிலேயே அவர் பாக்கிஸ்தானிலிருந்து தப்பிச்சென்றுள்ளார். கடந்த சில மாதங்கள் மிகவும் மோசமானவையாக காணப்பட்டன,நான் அச்சுறுத்தப்பட்டேன்,துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்துள்ள அவர் நான் உயிருடன் இருப்பதே அதிஸ்டமான விடயம் என குறிப்பிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அரசாங்கத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தான் எவ்வாறு அமெரிக்காவிற்கு ...
Read More »அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்!
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நியுயோர்க்கில் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன. அவுஸ்திரேலியாவின் எட்டு முக்கிய நகரங்களிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2500ற்கும் அதிகமான அவுஸ்திரேலிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை ...
Read More »வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு !
ஊருபொக்கை பகுதியில் நேற்று கடத்தப்பட்ட கூட்டுறவுப் பணிப்பாளர் கொட்டாவையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் பேச்சாரள் தெரிவித்தார். இதேவேளை கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இலக்கத் தகடற்ற வெள்ளைநிற வேன் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சந்தேகத்தில் 3 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், ஊருபொக்க பெரலபனாத்தர பிரதேசத்தில் இலக்கத் தகடற்ற வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்களால் நேற்றையதினம் அதிகாலை 6.00 மணியளவில் சுரங்க லக்மால் எதிரிசிங்க என்ற கூட்டுறவுப் பணிப்பாளர் கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Read More »தமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா?
ஜனாதிபதித் தேர்தலுக்கான காத்திருப்பு தொடங்கிவிட்டது. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன; சில அறிவிக்கவில்லை. சில பிற கட்சிகளின், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுகின்றன. தேர்தலைச் சுற்றி, மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பேசுபொருளாகியுள்ளது. தமிழர்கள், வாக்களித்தும் புறக்கணித்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், தமிழர்களின் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் வண்ணம், மாற்றங்கள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை, நாம் இப்போது கேட்டாக வேண்டும். ‘சமாதானப் புறா’ சந்திரிக்கா அம்மையார் முதற்கொண்டு, ‘நல்லாட்சி’யின் நாயகன் சிரிசேன வரை, எமது தேர்தல் தெரிவுகள், எவ்வகையான ...
Read More »2020 பெப்ரவரியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்?
ஜனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும் தனக்கு சாதகமான அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக. 2020 பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவார் என்று, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார். எத்தகைய ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கான அவசர விபத்து சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட 2,000 மில்லியன் ரூபாய் நிதியின் மூலம், அவ்வேலைத் திட்டம் நிச்சயமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கல்முனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அஹமட் அலி வைத்தியசாலையின் திறப்பு விழா, நேற்று மாலை (19) ...
Read More »ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று முதல் செலுத்தலாம்!
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும், அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் வேட்பாளர் மனுத் தாக்கல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வேட்பாளர் கட்டுப்பணம் இன்று (19) முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் ...
Read More »அடுத்தவாரம் வேட்பாளரை அறிவிப்போம் – ரணில்
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறுவதுடன், வேட்பு மனுத்தாக்கலானது ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக நேற்றைய தினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க போட்டியிட உள்ளதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக ...
Read More »பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம்!
பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய அரசு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதுடன், 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்யும் முடிவையும் திரும்பப்பெறாவிட்டால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவு மிகவும் உறுதியுடன் காஷ்மீர் பிரச்சினையை எடுத்துவைப்பேன். பாகிஸ்தானில் இருந்து யாராவது ஜிகாத் போராட்டத்துக்காக காஷ்மீருக்கு சென்றால், காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கும் முதல் நபராக ...
Read More »ரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி!
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவாகியிருக்கும் சர்ச்சை, மிகவும் மோசமான நிலையை அடைந்து உள்ளதாகவே தெரிகின்றது. ‘தாமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில், ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியாக இருக்கிறார். அதேவேளை, அவருக்கு அதற்கு இடமளிப்பதில்லை என்பதில், கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியாக இருக்கிறார். இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு, சஜித்துக்கு ஆதரவாகக் கட்சித் தலைமையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னர், ஐ.தே.கவுக்குள் தலைமைத்துவப் ...
Read More »