2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளைய தினம் (26) ஆரம்பிக்கப்படுவதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Read More »செய்திமுரசு
ஆஸ்திரேலியா: கொரோனா தடுப்பூசி போடச்சொல்வது சுதந்திரத்தை பறிப்பதாக குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சமீபத்திய கணக்குப்படி, 12 வயதுக்கு மேற்பட்ட 93.4 சதவீதமானோர் விக்டோரியா மாநிலத்தவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும் 89 சதவீதமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்கின்றனர். இவ்வாறான சூழலில், கொரோனா தடுப்பூசி எதிராக தகவல்களை பரப்பும் விதமாக ‘உலகளாவிய சுதந்திர பேரணி’ என்ற பெயரில் பிரிஸ்பேன், சிட்னி, அடியலெட், பெர்த், மற்றும் டார்வின் ஆகிய பல்வேறு ஆஸ்திரேலிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. “தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை கடைப்பிடிக்கும் அரசாங்கங்களை நாம் கொண்டிருப்போமே என்றால் இனி நாம் சுதந்திரமாக இருக்க ...
Read More »ஆஸ்திரேலியா: விசா மோசடியில் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்கள்
ஆஸ்திரேலிய புலம்பெயர்வு முகவர் ஜாக் தா கூற்றுப்படி, ஆங்கில மொழியை பெரிதும் அறியாத பெருமளவிலான வெளிநாட்டவர்கள் விசா விண்ணப்பங்களை பரிசீலணை செய்யப்படுவதற்காக புலம்பெயர்வு முகவர்களை நம்பியிருக்கின்றனர். ஆஸ்திரேலிய உள்துறையின் கணக்குப்படி, கொரோனா முந்தைய காலக்கட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 500 விசா மோசடி குறித்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
Read More »ஆங்கில கால்வாயில் கவிழ்ந்த அகதிகள் படகு- 31 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான், ஈராக், எரித்ரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் இருந்து உள்நாட்டு போர், வன்முறை காரணமாக வெளியேறும் அகதிகள் ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்கின்றனர். பிரிட்டன் நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு, ஆங்கில கால்வாயில் நேற்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அந்த படகில் 34 பேர் பயணம் செய்திருக்கலாம் எனவும், 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மைன் தெரிவித்தார். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் ...
Read More »வடக்கின் அபிவிருத்தி
அரச பாதீடு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்று க்கொண்டிருக்கிறது. இதில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். “முப்பத்தைந்து வருடகாலப் போரால் அழிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை, நாட்டின் ஏனைய பகுதி மக்களுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுவதும் எதுவித உத்தரவாதமோ விசேட கவனிப்போ இன்றி, நாட்டின் ஏனைய பகுதியினருடன் அவர்களை போட்டியிட நிர்ப்பந்திப்பதும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொடர்ச்சியாகவே கருதப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. மிக நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட ...
Read More »தவறை ஒப்புகொண்டது கூட்டமைப்பு
நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என, அந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்த தாமும் கோரவில்லை என தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தத் தவறை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறோம் எனவும் அறிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (24) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், “வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது என கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. “நல்லாட்சி ...
Read More »மேதகு பிரபாகரனால் சபையில் சர்ச்சை
நேற்று நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், மாவீரர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டார். தனதுரையை தொடர்ந்த அவர், ஒரு கட்டத்தில் “மேதகு பிரபாகரன்” என விளித்து கூறிவிட்டார். இதன்போது சபையில் இருந்த ஆளும் தரப்பு உறுப்பினர்களில் சிலர், ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பினர். அப்போது, சபைக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தலைமைத்தாங்கிக் கொண்டிருந்தார். முதலாவதாக ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆளும் கட்சியின் பெண் உறுப்பினரை பார்த்து, “ வீடு கொளுத்தும் ராசாக்களுக்கு ...
Read More »தமிழக நாடோடிகளின் அவலங்கள்
‘தமிழக நாடோடிகள் கூட்டமைப்பு’ தங்களை ‘நாடோடிப் பழங்குடியினர்’ (Nomadic Tribes) எனத் தனி இனத்தவராகக் கருதவும், கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வேண்டியும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறது. இது சாதி அட்டவணைப்படுத்துதலின் போதாமையையே சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் பூர்வகுடிகளான இவர்களை அலைகுடிகள், காலோடிகள் எனவும் அழைக்கலாம். சங்க காலத்தில் பாணர், பொருநர், விறலியர், பாடினியர், கூத்தர், அகவுநர் போன்ற நாடோடிக் குழுக்கள் இருந்தது, சங்க இலக்கியங்கள் வழி அறியப்படுகிறது. இவர்கள் குறவர், எயினர், ஆயர், உழவர், பரதர் போன்ற நிலைகுடிகளின் கொடையில், ...
Read More »ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதி ரூ.96 கோடிக்கு ஏலம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதியின் மதிப்பு 2.4 மில்லியன் முதல் 3.5 மில்லியன் டாலர்கள் என ஏல நிறுவனம் மதிப்பிட்டிருந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கு (13 மில்லியன் டாலர்) ஏலம் போனது. பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், ஆல்பர்ட் கைப்பட எழுதிய பிரதியை ஏலத்திற்கு விட்டது. அப்போது ஏராளமான நபர்கள் பிரதியை வாங்க ஆர்வம் காட்டினர். இறுதியில் அந்த சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி 13 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ...
Read More »தமிழ் இராச்சியத்தின் அரிய கல்வெட்டு
புகைபடர்ந்திருக்கும் இலங்கை தமிழரின் வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டும் வகையில், திருகோணமலையில் மிக அரிய தமிழ்க் கல்வெட்டு, பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு. திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில், கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. முன்னர் இப்பிரதேசம், கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது, இந்த இடம் குமரன்கடவை என அழைக்கப்பட்டது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்துக்குரிய அழிவடைந்த சிவாலயமும் அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டட அத்திவாரங்களும் காணப்படுகின்றன. இங்கு ...
Read More »