யாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தாம் அறிந்துகொண்டதாகவும், யாழ் மாவட்டத்தில் 95 வீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராக இருக்கின்ற நிலையில் தமிழ்மொழி தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை நியமிப்பது இது ஜனநாயக விரோதமான செயலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் அவர் கூறியுள்ள விடயங்கலாவது, எனக்கு அறிவிக்கப்பட்ட வகையில் மிக விரைவில்,யாழ் மாவட்டத்திற்கு ...
Read More »செய்திமுரசு
தமிழுக்கு வளம்சேர்க்கும் ஓர் இணையவாசி
பொழுதைப் போக்கவும், அரட்டை அடிக்கவும் இணையத்துக்கு வரும் பெரும்பாலானோர் மத்தியில் ஆக்கபூர்வமாக இணையத்தைப் பயன்படுத்துவோர் ஆங்காங்கே உள்ளனர். அவர்களுக்கெல்லாம் இணையத்தில் அறிவுபூர்வமான தகவல்களைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது விக்கிப்பீடியா எனும் களஞ்சியமாகும். அத்தகைய இணையக் கலைக் களஞ்சியத்தில் தமிழில் ஐம்பதாயிரத்துக்கும் மேல் தொகுப்புகள் செய்து, உலகின் ஐந்தாவது நபராக இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருளரசன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கனகரத்தினம், கனடாவைச் சேர்ந்த நக்கீரன், இலங்கையைச் சேர்ந்த அன்ரன், மதுரையைச் சேர்ந்த எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையடுத்து இந்த இமாலயப் பங்களிப்பைச் செய்துவரும் இணையவாசி ...
Read More »நியூசவுத் வேல்ஸ் 145 பேருக்கு கோவிட் தொற்று! குயின்ஸ்லாந்தில் புதிதாக ஒருவருக்கு
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 145 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று பதிவாகிவருகிறது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 145 பேரில் 66 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 79 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 51 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு ...
Read More »பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
கொரோனா பரவலைk கட்டுப்படுத்த அதிபர் மேக்ரான் தலைமையிலான பிரான்ஸ் அரசு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு ஏற்கனவே கொரோனா வைரசின் 3 அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில் 4-வது அலை எந்நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை பல்வேறு வழிகளில் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறி ...
Read More »புதிய பட்டுப்பாதை திட்டத்தில் உள்ள சிறந்த விடயங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்
சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் உள்ள சிறந்த விடயங்களை இலங்கை ஏற்றுக்கொள்ளவேண்டும்- பாதகமான விடயங்களை நிராகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடுநிலை வெளிவிவகார கொள்கைகைய இலங்கை பின்பற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவை பேணவேண்டும்,நாங்கள் சீனா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் சிறந்த உறவை பேணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு புத்துயுர்கொடுப்பதற்கான பொதுவான நீண்டகால கொள்கை கட்டமைப்பே அவசியம் பொதுவான எதிர்கட்சி கூட்டணி அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசமைப்பினால் பாதுகாக்கப்பட்ட பொதுவான கொள்கைகளே ...
Read More »கிழக்குப் பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணமும் சாதனை
மருத்துவ பீடங்களுக்கிடையிலான முதலாவது “அகில இலங்கை நரம்பியல் வினாவிடைப் போட்டி”யில் கிழக்குப்மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்கள் மூன்றாம் மற்றும் முதலாம் இடங்களை சுவீகரித்துச் சாதனை புரிந்துள்ளன.இம்மாதம் 20ஆம் திகதி இலங்கை நரம்பியல் சங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் zoom வழிப்போட்டியாக இந்நிகழ்வு நடைபெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டு இருந்தது. பின்னணியிலிருந்த யாழ்ப்பாண, கொழும்பு பல்கலைக்கழகங்கள் போட்டியின் இறுதிக் கட்டத்தில் மிகச்சிறப்பாக பதிலளித்து முன்னிலை வகித்தமை பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது .போட்டியின் இறுதிச் சுற்றில் மூன்றாம் இடத்தில் ...
Read More »Vaccination Passports என்றால் என்ன?
ஆஸ்திரேலிய எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக வெளிநாட்டுப்பயணங்கள் சாத்தியமில்லை என்ற நிலையிலும் Lockdowns – முடக்க நிலை, Border closures – எல்லைகள் மூடப்பட்டிருத்தல், mass event cancellation- திரளானோர் ஒன்று கூடக் கூடிய நிகழ்வுகள் ரத்துச்செய்யப்படுதல், schools closures – பாடசாலைகள் மூடப்பட்டிருத்தல் என்பவற்றுக்கு மீண்டும் எம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழலிலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் செளகர்யங்கள் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியைப்பெற Passports – கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படுவதுபோல, இன்றைய Covid 19 பின்னணியில், ஒரு நாட்டிலிருந்து ...
Read More »ரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்
சிகிச்சை நிறைவடைந்து ரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். குற்றப்புலனாய்வுப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று சனிக்கிழமை சிகிச்சை நிறைவடைந்து மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுகயீனம் காரணமாக அவர் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »த கபிட்டல் மகாராஜா’ குழுமம் தலைவர் காலமானார்
‘த கபிட்டல் மகாராஜா’ குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று காலமானார். கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
Read More »டென்னிஸ்: நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கெத்தாக வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார். ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-6, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ...
Read More »