ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலியா ஒயிட் வாஷ் ஆனாலும் ஆச்சர்யம் ஏதுமில்லை!
இந்தியா வரும் அவுஸ்ரேலியா நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒயிட் வாஷ் ஆனாலும் ஆச்சர்யம் படுவதற்கு ஒன்றுமில்லை என்று கங்குலி கூறியுள்ளார். அவுஸ்ரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் 23-ந்திகதி புனேவில் தொடங்குகிறது. இந்த தொடர் குறித்து இந்திய அணியில் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘இந்திய தொடர் அவுஸ்ரேலியாவிற்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. நான் ஏற்கனவே கூறியது போல் கிரிக்கெட்டில் என்னால் சரியாக கணித்து கூற இயலாது. ஆனால், அவுஸ்ரேலியா ...
Read More »மூடி மறைக்கப்படும் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்
1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன. பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது. அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. ...
Read More »இந்திய மண்ணில் அசத்தினால் சிறந்த அணி அந்தஸ்தை பெறலாம்: ஸ்டீவன் சுமித்
இந்திய மண்ணில் அசத்தினால் உலகின் சிறந்த அணி அந்தஸ்து கிடைக்கும் என்று அவுஸ்ரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் அவுஸ்ரேலியா ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற்றது கிடையாது. தற்போதைய டெஸ்ட் தொடரும் அந்த அணிக்கு யுத்தம் போன்று தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதையொட்டி அவுஸ்ரேலிய ...
Read More »சிட்னியில் இந்திய உணவுகள்!
A week in India எனும் உணவுத் திருவிழா அண்மையில் சிட்னி Shangri-La Hotel இல் நடைபெற்றது. ஆஸ்திரேலியர்கள் விரும்பி உண்ணும் உணவுவகைகளை இந்திய முறைப்படி சமைத்துக் காட்சிப் படுத்தியிருந்ததுடன் அவ்விடம் இந்தியாவின் மாறுபட்ட கலை கலாசாரங்களால், இசையால், வண்ணங்களால் நிரம்பியிருந்தது. மகேஸ்வரன் பிரபாகரன், பிரபல இந்திய சமையல் நிபுணர் Varun Gujral, மற்றும் சிட்னி Shangri-La Hotel இன் பிரதம சமையல் நிபுணர் Bo Sorensen ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார். http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?language=ta
Read More »அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு
அவுஸ்ரேலிய கிரிக்டெ் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு இம் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையிலேயே இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இருபதுக்கு -20 அணிக்கு உப்புல் தரங்க அணித்தலைவராக செயற்படுகின்றார். அதேவேளை, கடந்த ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் ...
Read More »அவுஸ்ரேலியா அணியில் கிறிஸ் லைனுக்குப் பதில் பென் டங்க்
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கிறிஸ் லைனுக்குப் பதிலாக பென் டங்க் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணி அவுஸ்ரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் 17-ந்திகதி தொடங்குகிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் கிறிஸ் லைன் இடம்பிடித்திருந்தார். கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லைனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கை தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இடது கை பேட்ஸ்மேன் பென் டங்க் ...
Read More »எழுச்சியுடன் எழுக தமிழ் பேரணி!
இன்று(10) மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட, கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு விவேகானந்தா மைதானத்தில் தற்போது ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடை பெற்றுக்கொண்டுள்ளது.
Read More »பிரிஸ்பேனில் புரந்தரதாஸர் ஆராதனை விழா!
பிரிஸ்பேன் ( அவுஸ்ரேலியா ) ஸ்ரீ ராகவேந்திரா பக்தி மண்டலி ஏற்பாடு செய்திருந்த புரந்தரதாஸர் ஆராதனை விழா, பிரிஸ்பேன் க்ரிபித் பல்கலைக்கழக நாதன் வளாகத்தில் உள்ள மல்டி பெய்த் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆராதனை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆராதனையில் சிறியவர் முதல் பெரியவர் வரை புரந்தரதாஸரின் கீர்த்தனைகளை பாடி அவரை நினைவு கூர்ந்தனர். கர்நாடக இசை பிரியர்களும் ரசிகர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்புற செய்தனர். இறுதியில், வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Read More »அவுஸ்ரேலியப் பிரதமரின் வீட்டருகே குழி
அவுஸ்ரேலியப் பிரதமர் மால்க்கம் டர்ன்புல் வீட்டிற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் குழி ஒன்று உருவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (7) பெய்த கனத்த மழையாலும் திடீர் வெள்ளத்தாலும் அந்தக் குழி உருவாகியிருக்கும் என நம்பப்படுகிறது. நடைபாதையில் உருவாகியிருக்கும் அந்தக் குழியால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தனியார் சொத்துக்குச் சேதமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவ்விடத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று நகராட்சியின் தொழில்நுட்பச் சேவை இயக்குநர் தெரிவித்தார்.
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			