ஆசிரியர் சங்கம் நிபந்தனைகளுடன் கல்வி அமைச்சரைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகிய இருவரும் இதுவரை காலம் நித்திரையிலிருந்து தற்போது தான் விழித்து ஆசிரியர் சங்கத்துடன் கலந்துரையாடலுக்கு நேற்றைய தினம் ஒத்துக் கொண்டுள்ளனர் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் இணைய கற்பித்தலிலிருந்து விலகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். முதலாவது நிபந்தனையின் கீழ் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே நாங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப் ...
Read More »செய்திமுரசு
மன்னார்,முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்வு
மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களில் செயற்பட்டு வரும் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு: நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத் தப்படும் ஆயிரம் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் செயல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில், ...
Read More »அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!
நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிகாவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட உள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
Read More »விசேட நாடாளுமன்றக் குழு முன்னிலையில் இன்று பேப்ரல் அமைப்பு
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இன்று (14) பேப்ரல் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபைமுதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலான இந்த விசேட குழு இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் கூடவிருப்பதுடன், இதில் குழுவின் அழைப்பையேற்றுக் கலந்து கொள்ளவிருக்கும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பேப்ரல்) தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளது. அதேநேரம், நாடாளுமன்ற விசேட குழு முன்னிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைப்பது தொடர்பில் ...
Read More »வைரஸ் தொற்றுக்குள்ளும் வாள்கள் ஓயவில்லை ?
அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு அது இல்லை. ஏன் இப்பொழுது உன்னதமான பாடல்களை எங்களால் உருவாக்க முடியவில்லை” என்று கேட்டேன். 1980களில் 90களில் நாடகங்களுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பாடல்களை உருவாக்கிய பலரும் இசையமைப்பாளர்களை உறங்க விடுவதில்லை.அவர்கள் உருவாக்கித்தரும் மெட்டுக்களை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்வதுமில்லை. இது போதாது இது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு தொடர்ச்சியாக நச்சரித்து ஒரு பாடல் அதன் உன்னதமான ...
Read More »24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை
24 ஆண்டுகளாக மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளார் அந்த பாசக்கார தந்தை. சீனாவில் குழந்தை கடத்தல் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இந்நிலையில் சீனர் ஒருவர் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை 24 வருடங்களாக தேடி இறுதியில் அவனுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது ...
Read More »ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்படுவதற்காகாக அழைப்பு
ஹிஜாஸ் ஹெஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோரின் தடுப்புக்காவல்இ முஸ்லீம் மக்களிற்கு எதிரான வன்முறை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிணை எதிர்த்து செயற்படுவதற்கு இலங்கையின் 96 கல்விமான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அறிக்கையொன்றில் ஹிஜாஸ் ஹெஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் பயங்கரவாத தடுப்புச்சட்டங்களை இரத்து செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும் அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் ...
Read More »சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா?
கடந்த சில நாட்களாக வடக்கில் சீன மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்கள் அகல கால் பதிப்பதாகவும் இது ஈழத்தமிழர் நலன்களுக்கும் அதற்கு அப்பால் இந்திய இறையாண்மைக்கும் அச்சுறுதலை ஏற்படுத்தலாம் எனவும் பாராளுமன்றத்தில் தமிழ் கட்சி உறுப்பினர் ஒருவர் மிகுந்த உசாராகப் பேசியிருந்தார். அத்துடன் இந்தியா தமது தொப்புள்கொடி உறவுகளாம், அதனால் இந்தியா பக்கமே தாங்கள் நிற்போம் இந்தியாவுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் விளாசித்தள்ளியிருந்தார். இவர்கள் பேசிக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் (4.7.2021)பாக்கு நீரிணைக்கடலில் தொப்புள்கொடி உறவுகள் வட மராட்சி கிழக்கு மீனவர்களின் சுமார் எழுபத்தைந்துக்கும் (75) மேற்பட்ட படுப்பு ...
Read More »89 பேருக்கு கோவிட் தொற்று! ஒருவர் பலி!
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 89 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார். சிட்னியின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுகளிலுள்ள முதியவர் ஒருவரே மரணமடைந்ததாகவும் இவருக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஆகக்குறைந்தது 21 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நால்வருக்கும் ...
Read More »விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது
கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவரை விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிஐடியினர் கைதுசெய்துள்ளனர். காவல் துறை பேச்சாளர் அஜித்ரோகண இதனை தெரிவித்துள்ளார். பாக்கியதுரை நகுலேசன் என்பவரே சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2019 ம் ஆண்டு கட்டாருக்கு சென்றவர் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவித்துள்ள காவல் துறை பேச்சாளர் அவருக்கு எதிராக சர்வதேச காவல் துறை ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். ...
Read More »
Eelamurasu Australia Online News Portal