செய்திமுரசு

அவுஸ்திரேலியர்களின் விருப்பத்துக்குரிய வாகனம் விடைபெறுகின்றது!

அவுஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக நீண்டகாலம் சந்தையில் கோலோச்சிய Toyota Tarago 36 வருடங்களுக்கு பிறகு விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Toyota நிறுவனம் இந்த விடயம் அறிவித்துள்ளது. 1983 இல் சந்தைக்கு வந்த இவ்வாகனம் உடனடியாகவே அவுஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரியதாக மாறியது. 80 – 90 களில் பெரிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக வசீகரித்துக்கொண்ட – 12 ஆசனங்களைக்கொண்ட – Toyota Tarago சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த வாகனத்தின் ...

Read More »

நீதித்துறை மீண்டும் தோல்வி!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று. சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது பெரிய எதிர்விளைவுகள், போராட்டங்கள், சர்ச்சைகளை ...

Read More »

‘ஊசியை வைத்தே அம்மாவின் சடலத்தை கண்டேன்’!

ஆலயத்துக்கு சென்ற எனது அம்மாவும் இறந்துவிட்டாரென மாமா சொன்னார். அம்மா​ சென்றிருந்த ஆ​லையத்து ஓடோடிச் சென்றேன். ஆனால், காவலில் நின்றிருந்தவர்கள், உள்ளே செல்வதற்கு என்னை அனுமதிக்கவில்லை என சாட்சியமளித்த ஒரு தாயின் மகன், அம்மாவின் கொண்டை ஊசி மற்றும் வௌ்ளை நிறத்திலான தோடு ஆகியவற்றை வைத்தே, அம்மாவின் சடலத்தை அடையாளம் கண்டேன் என, கண்ணீர் மல்க, சாட்சியளமளித்தார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மரண விசாரணை, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, நேற்று (23) இடம்பெற்றது. விசாரணையை, ...

Read More »

ஐ.நா.வின் விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும்!

வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் தொடர்ந்து இடம்­பெற்­று ­வரும் மனித உரிமை மீறல்­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கு ஐ.நா. மனித உரி­மைகள் கண்­கா­ணிப்புக் குழு ஒன்றை இலங்­கையில் அமைக்க வேண்டும் எனவும்  ஐ.நா. மனித உரி­மைகள் சபையின் விசேட பிர­தி­நிதி ஒரு­வரை நிய­மிக்க வேண்டும் என்றும் வட­ மா­காண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மு­மான நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வரன் ஐ.நா. செய­லாளர் நாயகம் அந்­தோ­னியோ குட்­ர­ஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­யுள்ளார். வடக்கு, கிழக்கில் பெரு­ம­ளவில் இரா­ணுவம் குவிக்­கப்­பட்டு தமிழர் நிலங்­களில் இரா­ணுவ அனு­ச­ர­ணை­க­ளுடன் குடி­யேற்­றங்கள் நடை­பெ­று­வ­தா­கவும் ...

Read More »

தற்­கொலைக் தாக்­கு­தல்­தா­ரி­க­ளுக்கு வீடு கொடுக்க உதவி புரிந்தவர் கைது!

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­தா­ரி­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு வீடு பெற்றுக் கொடுப்­ப­தற்கு உதவி புரிந்தார் என்ற குற்­றச்­சாட்டில் சந்­தே­கத்தின் பேரில் கைதுசெய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு வந்த இளை­ஞனை கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஐ.எம். றிஸ்வான் புதன்­கி­ழமை (22) விடு­தலை செய்­துள்ளார்.   சஹ்ரான் குழு­வி­ன­ருக்கு வீடு பெற்றுக் கொடுப்­ப­தற்கு உதவி புரிந்­துள்­ளா­ரென சந்­தே­கத்தின் பேரில் கடந்த 02 வாரங்­க­ளுக்கு முன்னர் பொலி­ஸா­ரி­னாலும், குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­க­ளாலும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குறித்த இளை­ஞன்­கைது ...

Read More »

தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு! – மந்திரி பதவி விலகல்!

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவான போராட்டம் ஓயாது!

இலங்கைக்கு திருப்பி அனுப்பபடவுள்ள நிலையில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்தும் போராட்டம் நடத்திவரப்படுகின்றது. லிபரல் கூட்டணி ஆட்சிபீடமேறினாலும் தங்களது முயற்சியில் தாங்கள் சோர்ந்துவிடவில்லை என நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளார்கள். பிரதமர் Scott Morrison, உள்துறை அமைச்சர் Peter Dutton உட்பட அரசின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினரின் நாடுகடத்தலை தடுக்கக்கோரும் மின்னஞ்சல்களையும் வேண்டுகோள்களையும் தொடர்ந்தும் அனுப்பிவருவதாக ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். நாங்கள் வாக்களித்துள்ள அரசியல்வாதிகள் எங்களது குரலுக்கு செவிசாய்க்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை ...

Read More »

மோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது?

பிரதமர் நரேந்திரமோடி தலைமை வகிக்கும் இந்துத்துவ கொள்கையை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் புதிய கருத்துருவாக்கங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும்  பயன்படுத்தவேண்டிய தருணம் உருவாகியுள்ளது. இந்த வெற்றிக்காக  மோடியை மாத்திரம் பாராட்டவேண்டும், குஜராத்தில் தான் கற்றுக்கொண்டதை அவர் தேசிய அளவில் பயன்படுத்தியுள்ளார். என்னை போன்ற அரசியல் ஆய்வாளர்கள் பலர் மோடியினால் மீண்டும் அந்த மாயாஜாலத்தை செய்து காண்பிக்க முடியாது என கருதினார்கள். ஆனால் இந்த விடயத்திலேயே மோடி மேதையாக காணப்படுகின்றார். நான் எப்போதும் அவர் பின்பற்றும் கொள்கைகயையும் அவரது பாணி அரசியலையும் விமர்சித்து வந்துள்ளேன். ஆனால் அவர் பாரம்பரிய ...

Read More »

மீண்டும் பிரதமராகிறார் மோடி! பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை!

மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். 91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் ...

Read More »

இந்தியத் தேர்தல் களம் – 2019

தமிழக சட்டசபை தொகுதிகளிற்கான இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 12 தொகுதிகளில் தி.மு.க. முன்னிலையில் உள்ளதுடன் அ.தி.மு.க. 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாளவளவன் முன்னிலையில் உள்ளார். திருமாளவளவன் ஒரு கட்டத்தில் பின்னிலையில் இருந்தபோதிலும் தற்போது முன்னிலையில் உள்ளார். இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் தூத்துக்குடியில் தி.மு.க.வின் வேட்பாளர் கனிமொழி அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை விட 20,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதேவேளை சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாளவளவன் பின்னிலையில் ...

Read More »