- தமிழக சட்டசபை தொகுதிகளிற்கான இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 12 தொகுதிகளில் தி.மு.க. முன்னிலையில் உள்ளதுடன் அ.தி.மு.க. 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
- சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாளவளவன் முன்னிலையில் உள்ளார். திருமாளவளவன் ஒரு கட்டத்தில் பின்னிலையில் இருந்தபோதிலும் தற்போது முன்னிலையில் உள்ளார்.
- இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் தூத்துக்குடியில் தி.மு.க.வின் வேட்பாளர் கனிமொழி அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை விட 20,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
- இதேவேளை சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாளவளவன் பின்னிலையில் உள்ளார்.
- இந்திய பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி வரணாசி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
- அதேபோன்று பா.ஜ.க. தலைவர் அமித்சா காந்தி நகர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
- இந்திய பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பின்தங்கியுள்ளார்.
- ராகுல்காந்தி அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வயநாட்டில் முன்னிலையில் உள்ளார். இதேவேளை சோனியா காந்தி அமேதி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.