செய்திமுரசு

அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை!

அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது. ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் ...

Read More »

சதுப்பு நில பகுதியில் சிக்கியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்!

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கான முயற்சியின் போது குயின்ஸ்லாந்தின் முதலைகள் நிறைந்த சதுப்பு நில பகுதியில் சிக்கிய சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலைகள் நிறைந்த பகுதியில் சிக்கிய படகில் வியட்நாமை சேர்ந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படகின் தலைமை மாலுமி மற்றும் அவரின் சகாவை காவல்துறையினர் அழைத்துச்செல்வதை பார்த்ததாக ஏபிசியின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பு எதுவுமின்றி காவல்துறையினரின் வாகனத்திற்குள் சென்றனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். படகு கரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் ...

Read More »

சீனாவின் பட்டுப்பாதையில் ஆழமாக புதைந்து போன தென்னிலங்கை!

சீனா தனது பட்டுப்பாதை திட்டத்திற்காக பல நாடுகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்து மா சமுத்திரத்தின் தெற்காசிய நாடுகளில் சீன திட்டங்கள் மிகவும் ஆழமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக அபிவிருத்தி திட்டங்களானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் காரணமாகியுள்ளது. அவ்வாறான ஒன்று தான் அம்பாந்தோட்டை துறைமுக திட்டமாகும். பல நாடுகளில் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் தனது வெளிப்படை தன்மையை காண்பிக்கும் வகையிலும் சீனா தற்போது செயற்பட தொடங்கியுள்ளது. இதனடிப்படையில் , சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின்,கீழ் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கையின் தென் ...

Read More »

எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஒரு வருடங்களை கடந்து அவர்களின் உறவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்சியான போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். சர்வதேசம் நீதியை பெற்று தர வேண்டும் என கோரி தமது போராட்டத்தை பல்வேறு ...

Read More »

பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு மரியாதை ரத்து!

பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் அரசு மரியாதை ரத்து செய்யப்படுவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆடம்பர பிரதமர் பங்களா தேவையில்லை என்று கூறி ராணுவ செயலாளரின் 3 படுக்கை அறையுடன் கூடிய வீட்டில் தங்கியுள்ளார். தன்னுடன் 2 பணியாளர்களை மட்டுமே உதவிக்கு வைத்திருக்கும் அவர் 2 அரசு கார்களை மட்டுமே பயன்படுத்துகிறார். ஆளுநர்  மாளிகைகளில் ஆடம்பர வசதி கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை சர்வதேசம் விரைவில் வழங்க வேண்டும்!

இலங்கையில் எட்டு மாவட்டங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்க்கமான நீதியை சர்வதேசம் விரைந்து வழங்க வேண்டுமென அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி நாளைமறுதினம் 30 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் அமைதியான முறையில் பாரிய பேரணி ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணை அலுவலகம் சர்வதேசத்தினை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும். இந்த அலுவலகத்தின் ஊடாக எந்தவொரு நன்மையும் இல்லை. எமது எதிர்ப்பின் ...

Read More »

முன்னாள் பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்கிறார்!

சமீபத்தில் பதவி விலகிய ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஈழ அகதி தற்கொலை!

அவுஸ்திரேலிய அரசினால் அகதி அந்தஸ்து வழங்கப்படாது வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை முயற்சி செய்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் ஏதிலியான வசந்தகுமார் என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் உயிரிழந்துள்ளார். வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பெண்பிள்ளைகளின் தந்தையான இவர் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்திருந்தார். இந்நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் செயற்கை சுவாசம் நேற்று மாலை நிறுத்தப்பட்டிருந்தது. அவரிற்கான செயற்கை சுவாசத்தை மீள ...

Read More »

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிரான வழக்கு!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் இன்று தனது வாதத்தை முன்வைக்க உள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக ஈரானின் எண்ணெய் வளம் மற்றும் ஆற்றல் ...

Read More »

பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !

அந்த விடியலில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பதே பெருமகிழ்ச்சி. பிரெஞ்சுக் கொடுங்கோல் முடியரசின் அரணாக நின்ற பாஸ்டி சிறைக்கூடம் மக்களால் தகர்த்தெறியப் பட்டதைக் கேட்டவுடன் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் குதுகலத்தில் துள்ளினான்.   படைகளை அனுப்பாமலேயே ஐரோப்பாவை பிரான்ஸ் ஆக்கிரமித்து விட்டது. புரட்சியின் சிந்தனை ஐரோப்பாவென்ன உலகெங்கிலும் தீ போலப் பரவியது. பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களே அதைத் தங்கள் நாட்டின் உள் விவகாரமாகக் கருதவில்லை. புரட்சி மனித குலத்தின் தேவையெனக் கருதினார்கள். ”உலகம் தன் தலையின் மீது நின்ற காலம் அது” என்றார் ஹெகல். ...

Read More »