சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஒரு வருடங்களை கடந்து அவர்களின் உறவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்சியான போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். சர்வதேசம் நீதியை பெற்று தர வேண்டும் என கோரி தமது போராட்டத்தை பல்வேறு விதத்தில் தொடர்கிறார்கள்.
அந்தவகையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட திகதியை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் முன்னெடுக்கவுள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal