அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது.
அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது.
ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் அணு ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது என சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இந்நிலையில், அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்புடனான சந்திப்பில் கிம் ஜாங் அன் தெரிவித்ததை போல் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும். அப்படி அழிக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மைக் பாம்பியோ வடகொரியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.