செய்திமுரசு

மன்னார் மனித எலும்புக்கூடு : பரிசோதனைக்காக வெளிநாடு கொண்டுசெல்ல நடவடிக்கை!

மன்னர் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளிலிருந்து அதன்  மாதிரிகள் பரிசோதனைக்கு கொழும்பிற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், கடந்த   புதன் கிழமை முதல்   மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளன. 6 மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் 121 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.   தற்போது வரை ...

Read More »

அவுஸ்திரேலியா சென்ற இராட்சத விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 ரக விமானம் ஒன்று இன்று (22) அதிகாலை 5.30 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து அவுஸ்திரேலியா சிட்னி நகரம் நோக்கி பயணிக்கும் போது, குறித்த விமானத்தில் பயணித்த ஒருவர் திடீர் சுகயீனமடைந்தமையினால் இவ்வாறு விமானத்தை தரையிறக்க நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் போது குறித்த விமானத்தில் 490 பயணிகள் மற்றும் 22 ஊழியர்கள் பயணித்துள்ளனர். விமானத்தில் சுகயீனமடைந்த பயணி கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய மத்திய நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ...

Read More »

அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்!

அமெரிக்காவில் அரசின் செலவின மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிர்வாகப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. நிர்வாக முடக்கம் காரணமாக 8 லட்சம் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். அல்லது அவர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக ...

Read More »

நேசத்தின் ஞானத்தைச் சொன்னவர்!

ஒர் இனிமையான கற்பனையைச் செய்துகொள்ளுங்கள். கால இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் செல்லும் காலத்தில் 24 மணி நேரத்துக்குமேல் நீங்கள் சஞ்சரிக்கமுடியாது. இந்தக் கால அவகாசம் போதும் என்று அதில் பயணிப்பதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, ஏறி அமர்ந்துவிட்டீர்கள். எந்திரத்தில் இருந்த ‘காலம் காட்டி’யில் ’இயேசு பிறந்திருந்த தினம்’ என டைப் செய்துவிட்டீர்கள். இயந்திரம் புறப்பட்டுவிட்டது. 2018 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்ததை உங்கள் உடல் உணர வில்லை. ஆனால் இயந்திரத்தின் கதவு திறந்தபோது உங்கள் உள்ளம் அதை உணர்ந்துவிட்டது. அதுவரை நீங்கள் உணர்ந்திராத உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களைச் ...

Read More »

9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்!

ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் தாமதமின்றி நடக்கும் என  அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தேர்தல்களில் வெற்றிபெறும் நோக்கத்துடன்  கடந்த காலங்களில் பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்தி வெவ்வேறு நாட்களில் மாகாணசபை தேர்தல்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாங்கள் இந்த பாராம்பரியத்தினை மாற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளிற்கான தேர்தல்கள் ஒரே நாளில் இடம்பெறும் முடிந்தால் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலையும் கூட ஒரே நாளில் நடத்துவோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடி நாட்டின் பொதுச்சேவையில் ...

Read More »

மத்திய வங்கி மோசடி 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம்!

1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002, 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே இந்த விடயங்கள் தெரியவந்தன. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை ...

Read More »

ஹரி சீனிவாசன்: பெருநோய்த் தடமழித்த பெருந்தகை

தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டிய மருத்துவ ஆளுமைகளில் ஒருவர் அவர். ஆனால், மருத்துவர் ஹரி சீனிவாசன் என்ற பெயர் தமிழ்நாட்டில் பரிச்சயமான பெயர் அல்ல. அவருடைய மற்றொரு பரிமாணமான ‘எழுத்தாளர் சார்வாகன்’ அறியப்பட்டிருந்த அளவுக்குக்கூட ஹரி சீனிவாசனின் மருத்துவ சேவை வெளிச்சத்துக்கு வந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், அவருடைய சொந்த ஊரான, ஆரணியின் மக்களுக்குக்கூட அவருடைய அருமை பெருமைகள் தெரியாது. சார்வாகனின் எழுத்துகளைப் படித்த வாசகர்களிலும் பெரும்பாலானோருக்கு அவர் ஒரு மருத்துவர் என்ற விவரம் தெரியாது. யார் இந்த ஹரி சீனிவாசன்? சரி, யார் இந்த ...

Read More »

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலமானார். புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் ...

Read More »

விரைவில் மீண்டும்  ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம்! -மகிந்த

விரைவில் மீண்டும்  ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில்  உரையாற்றும் போது தங்களை ஆட்சியமைக்க இடமளிக்கவில்லை. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நான், பிரதமராக பதவியேற்றபோது அதனைச் செய்தேன். இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது ஆசனங்கள் நிலையானவை என நம்பியிருக்க கூடாது நாங்கள் விரைவில் மீண்டும் ஆட்சியை கவிழ்ப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் ...

Read More »

நாமல்குமார ஒரு பைத்தியக்காரன்!-சரத்பொன்சேகா

சிறிலங்கா ஜனாதிபதி கொலை முயற்சி சதி தொடர்பான விடயத்தில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்பது காவல் துநை  விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார். அத்துடன் நாமல் குமார ஒரு பைத்தியக்காரன் எனவும், என் மீது வீண் பழி சுமத்தி வருகின்றான் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கவனம் கொள்ள செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Read More »