செய்திமுரசு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

இன்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி 22ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நேற்றைய தினம் வரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 359 ஆக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இன்று அந்த எண்ணிக்கை தவறு எனவும் 253 பேர்களே உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பின் போது தவறுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Read More »

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்?

கடந்த மாதம் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் க்ரைஸ்ட் சர்ச் பகுதியில் இரு பள்ளிவாசல்களில் வெள்ளை  இனப் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான சம்பவத்திற்குப் பதிலடியாகவே ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று 350 இற்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. சர்வதேச இயக்கத் தொடர்புகளிடமிருந்து கிடைத்திருக்கூடிய உதவியுடன் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற உள்நாட்டு இஸ்லாமிய இயக்கமே தாக்குதல்களை மேற்கொண்டதாக விசாரணையாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்குத் தாங்களே பொறுப்பென்று இஸ்லாமிய அரசு ...

Read More »

மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்!

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன்  சம்மந்தப்பட்ட  ஹாறான் மெலவியின்  உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து  நேற்று   கைது செய்துள்ளதாக காவல் துறை  அதிகாரி தெரிவித்தார்.   இது பற்றி தெரியவருவதாவது குறித்த தற்கொலையாளி கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வருவதற்காக கொழும்பு வெள்ளவத்தையில்  இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்வும் தனியார் பஸ் வண்டியில் கடந்த 20 ம் திகதி இரவு 9. 00 மணியளவில் ...

Read More »

இவர்களை பற்றி தகவல் தாருங்கள்!

கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அறுவர் குறித்த தகவல்களை காவல் துறையினர் கோருகின்றனர்.  மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா பாத்திமா லத்தீஃபா மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல்லா ஸாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் அப்துல் காதர் பாதிஃமா காதியா மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் அவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு காவல் துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More »

மௌனத்திலிருந்தே உருவாகின்றன வெடிகுண்டுகள்!

“அது 2002 என்று நினைவு. எங்கள் ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு, பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று ஆன்டனாக்களை உடைப்பது, சிடி விற்கும் கடை உரிமையாளர்களை எச்சரித்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.”, அது 2002 என்று நினைவு. எங்கள் ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு, பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று ஆன்டனாக்களை உடைப்பது, சிடி விற்கும் ...

Read More »

விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

விமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமானம் அறிவித்துள்ளது. விமான பயண சீட்டுகளை கொள்வனவு செய்தல் விமான பயணத்திற்கான நாளில் மாற்றத்தை மேற்கொள்ளுதல் ஆசன ஒதுக்கீது விமானம் புறப்படுதல் மற்றும் வரும் நேரங்கள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ளுதல் முதலானவை இந்த அலுவலக சேவையில் இடம்பெறுகின்றன. மட்டக்களப்பு கம்பஹா அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் குருநாகல் வவுனியா வென்னப்புவ பேராதனை ஆகிய ...

Read More »

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம்!

பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ‘இன்சைட்’ விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ‘இன்சைட்’ விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் ...

Read More »

தற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயம்?

மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன. குறித்த தாக்­கு­தலை நடத்த வந்­த­வரை தேவா­லய நிர்­வா­கத்­தினர் சந்­தேகம் கொண்டு வெளியில் அனுப்ப முற்­பட்­ட­போது அவர் வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­ட­தா­கவும் சம்­ப­வத்­தின்­போது பாதிக்கப்பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர். தேவா­ல­யத்­திற்குள் நுழைய முற்­பட்­ட­வரை தேவா­லய ஊழி­யர்கள் தேவா­ல­யத்­திற்குள் இருந்­து­வெ­ளி­யேற்­றிய நிலையில் மீண்டும் அவர் தேவா­ல­யத்­திற்குள் நுழைய முற்­பட்ட வேளையில் அவர் ஊழி­யர்­க­ளுடன் வாக்­கு­வாதம் செய்­து­கொண்­டி­ருக்­கும்­போதே குண்டை வெடிக்­கச்­செய்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதே­வேளை கொலை­யாளி மட்­டக்­க­ளப்பு மரியாள் பேராலயத்தினை இலக்­கு­வைத்தே வந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. தாக்­குதல் நடந்த ...

Read More »

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் ?

யாழ்.  இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கில் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை  இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதணை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி ...

Read More »

தாக்குதல் தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை! – நியூஸிலாந்து பிரதமர்

நியூஸிலாந்தின் கிரைஸ்சேர்ச் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் அமைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் இக் கருத்து தொடர்பில் நியூஸிலாந்துப் பிரதமர் ஜெஸின்டா ஆர்டென், இலங்கைத் தாக்குதல் தொடர்பில் தமது நாட்டு புலனாய்வுத் துறையினருக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்ல‍ை எனவும், இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். நியூஸிலாந்து கிரைஸ்சேர்ச் நகரில் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கு தேவாலயங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், ...

Read More »