தீவகத்தில் கடற்படையினர் கடந்த 30 வருடகாலமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களை விடுவிக்கவேண்டும் என கோரி இன்று வேலணை பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
Read More »செய்திமுரசு
தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்
தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக நியமிக்கப்பட இருப்பவர் டாக்டர் விவேக் மூர்த்தி. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று கிருமி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படும் போது தான்அதன் வகைகளை அடையாளம் காண முடியும். எனவே மரபணு ரீதியிலான சிறந்த கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் ...
Read More »ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய போரிஸ் ஜோன்சன்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொலைபேசியில் நேற்றைய தினம் தொலைபேசியில் உரையாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பின்பு ஜோ பைடன் தொலைபேசியில் பேசிய முதல் ஐரோப்பிய தலைவர் போரிஸ் ஜோன்சன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோ பைடனுடன் பேசிய பிறகு, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ ஜோ பைடனுடன் ...
Read More »கூகுள் நிறுவனம் +ஆஸ்திரேலிய அரசு – முற்றும் மோதல்! காரணம் என்ன?
செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி வழங்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம் சட்டத்தை கைவிடாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துள்ளது. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்துள்ளதால் மோதல் முற்றியுள்ளது ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள் இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் ...
Read More »நில அபகரிப்பு தொடர்பில் நம்பகத்தன்மையான ஆவணப்படுத்தலும் ஆய்வும் மிக அவசியம்
நில அபகரிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிரான பல்வேறு வடிவங்களிலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி இருக்கிறார். தமிழ் கட்சிகளுக்கு இடையிலான காணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றம் திருநெல்வேலி இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோது விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். “சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை ...
Read More »இலங்கையில் கொரோனாவுக்கு 9 சிறைக் கைதிகள் இதுவரை பலி
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் வீழ்சியடைந்து வருகின்ற நிலையிலும் , புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. காலி சிறைச்சாலை கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் இன்றைய தினம் புதிதாக 10 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர். மற்றையவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளபவர். இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 5 ...
Read More »மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்!
தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ...
Read More »அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொள்ளப்போவதாக எச்சரிக்கை ஏன்?
அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொளளப்போவதாக அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூகுள்; முகநூல் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வழங்கும் செய்திகள் உட்பட உள்ளடக்கங்களிற்காக ஊடக நிறுவனங்களிற்கு ரோயல்டி செலுத்தவேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்தி;ற்கு எதிர்ப்பு தெரிவித்தே கூகுள்; இந்த எச்சரிக்கையை வெளியி;ட்டுள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத சட்டமொன்றை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை என கூகுள் அவுஸ்திரேலியாவின் முகாமைத்துவ இயக்குநர் மெல்சில்வா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா இந்த சட்டத்தினை நிறைவேற்றினால் அவுஸ்திரேலியாவில் கூகுள் தேடும் ...
Read More »பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு
பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்” என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.
Read More »பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியம்!
பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்வேளை மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கர் குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பில் இலங்கை தீர்வு காணவேண்டிய விடயங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கான மரியாதைகள் ஆகியவை பரஸ்பரவ வலுவூட்டும் நோக்கங்களாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான எமது நடவடிக்கைளின் போது அப்பாவி மக்கள் பாதிக்கப்டாமலிருப்பது பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான எங்கள் முயற்சிகளில் ஒரு முக்கிய அங்கமாகயிருக்கவேண்டும். தனியுரிமைக்கான உரிமைகள் சிந்தனை சுதந்திரம், குற்றமற்றவர் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal