காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் திகதி மன்னார் மனித புதை குழி தொடர்பாக இடம்பெற்ற வழக்கு விசாரணை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இடம் ...
Read More »செய்திமுரசு
டெல்லி கலவரத்துக்கு ஐநா சபை கண்டனம்!
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் காவல் துறை செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஹை கமிஷனர் கூறியுள்ளார். ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பின் 43-வது ஆலோசனை கூட்டம் சுவீட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஹை கமிஷனர் மிச்சேல் பேச்லட் பேசும்போது, டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தார். இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் காவல் துறை செயல்படாமல் ...
Read More »வங்காளதேசத்தை 86 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
கான்பெர்ராவில் நடைபெற்ற ஆட்டத்தில் 189 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தை 103 ரன்னில் கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்றது. பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் வங்காளதேச வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அலிசா ஹீலி 53 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பெத் ...
Read More »ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதியின் நாவல் திரைப்படமாக…..!
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானியின் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ எனும் நாவல் விரைவில் திரைப்படமாக உருவெடுக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பை Sweetshop & Green, Aurora Films மற்றும் Hoodlum Entertainment எனும் தயாரிப்பு நிறுவனங்கள் தனது கூட்டறிக்கையில் வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு ...
Read More »விக்கிப்பீடியாவில் தமிழ் முன்னணியில் இருப்பது எப்படி?
துறை சார்ந்த நிபுணர்கள் முதல் மாணவர்கள், பொதுமக்கள் வரை தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் தேடிப் பெற கூகுள் போன்ற தேடு பொறிகள் பெரும் உதவியாக உள்ளன. எனினும், பெரும்பாலான தகவல்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் தகவல்களைத் தேடுவோர் எண்ணிக்கை ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் 68% உள்ளது. இந்நிலையில், பல்வேறு துறை சார்ந்த தகவல்கள் இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் கிடைக்கச் செய்வதற்கான ஏராளமான தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவ்வகையில், தமிழ் மொழி தகவல்களை இணையத்தில் இடம்பெறச் செய்வதில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா 2003 ...
Read More »இலங்கை ஊழியர்களுக்கு கொரோனா இல்லை – விரைவில் நாடு திரும்புவர்
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் சேவையாற்றிய இலங்கை ஊழியர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனைகளில் உறுதியானதை அடுத்து அவர்கள் இவ்வாறு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் இருந்து 3,700 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4 ஆம் திகதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டயமன்ட் பிரின்ஸஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ...
Read More »சாம்பியா குடியரசின் இராணுவ தளபதி இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு
சாம்பியா குடியரசின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டப்ள்யூ.எம் சிகாஷ்வோ (DSS) எம்ஏ (DSS) இலங்கைக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு இலங்கை இராணுவ தளபதியை சந்திப்பதற்காக வருகை தந்தார்.
Read More »பொது தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை!
இந்த வருடத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்க்பபடும் பொது தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தலின் போது 2019 தேருநர் இடாப்பு பயன்படுத்தப்படுவதனால் அந்த பாராளுமன்ற தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும் வாக்காளர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல். தேர்தல் ...
Read More »இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்!
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன் அவரே சென்று ; சாட்சியம் வழங்கி அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது இலங்கை தமிழர்களுக்கு எதிராக ...
Read More »அனுசரணையில் இருந்து விலகியது சிறிலங்கா!
2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக சிறிலங்கா அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகப்பூர்வமாக இன்று (26) அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Read More »