ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி இதுவரை கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொ றுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியை ஜனாதிபதியிடம் கேட்டதாகவும், ஆனால் இதுவரை அது கிடைக்கவில்லை என்றும் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Read More »செய்திமுரசு
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு – பெண் கவலைக்கிடம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆா்ப்பாட்டங்களில் ...
Read More »ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஆஸ்திரேலியா கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசிபிக் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து, வணூட்டு, புதிய கலிடோனியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் உருவாக வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை ...
Read More »மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம்
தமிழ் பேசும் அத்தனை உறவுகளின் அபிலாசைகளின் வெளிப்பாடுதான் பேரணி வெற்றிபெற்றது. நாம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழச்சி இயக்கம் என்ற பெயரில் ஒரு மக்கள் இயக்கத்தை இங்கு அங்குரார்ப்பணம் செய்கிறோம் என தவத்திரு வேலன்சுவாமி தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பொத்துவில் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரு வெற்றியாக தாயகத்திலும் சர்வதேசத்திலும்& கவனத்தை ...
Read More »நியூசிலாந்து, இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சுனாமி அலை உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிஜி, நியூசிலாந்து மற்றும் வனுவாட்டுவின் சில கடலோர ...
Read More »பொத்துவில் மூலம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சுமந்திரன் துரோகமிழைத்துள்ளார்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நேற்றைய நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் கொழும்பில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- ஐந்து நாட்களாக கிட்டதட்ட ஒரு இலட்சம் மக்களின் பங்களிப்புடன் – இறுதிநிகழ்வில் ...
Read More »குருந்தூர் மலையில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிப்பு
தொல்லியல் அகழ்வாராய்ச்சி இடம்பெற்று வரும் முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அகழ்வின் போது சிவலிங்கத்தை ஒத்த இடிபாடு ஒன்று வெளிப்பட்டுள்ளது. ஆதி ஐயனார் ஆலயம் இருந்த பகுதியில் அண்மையில் புத்தர் சிலை வைத்து தொல்லியல் திணைக்களத்தினால் தொல்லியல் அகழ்வாராச்சி ஆரம்பட்டது.
Read More »வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா!
வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 776 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை ...
Read More »ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலியாவில் பல போராட்டங்கள்
ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் ஆடுகிறார் அங்கிதா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆடுகிறார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, மிஹாலா புஜர்னிஸ்குவுடன் (ருமேனியா) ஜோடி சேர்ந்து ...
Read More »