செய்திமுரசு

அன்று முள்ளிவாய்க்காலில் இறந்த தாயின் பாலைகுடித்த மழலை இன்று சிறுமியாய் பொது சுடர் ஏற்றினாள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 10ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு  அக வணக்கத்துடன் நினைவஞ்சலி ஆரம்பமாகி 10.32 மணிக்கு முள்ளிவாய்க்காலில் தாயை இழந்த  சிறுமி பொது சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.            

Read More »

சரணடைந்து பத்து வருடங்கள்- பிரான்சிஸ் அடிகளார் எங்கே?

தமிழில் ரஜீபன் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பத்துவருடங்களாகிவிட்டன.தங்கள் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இழந்த ஆயிரக்கணக்கானவர்களிற்கு அவை யுத்தத்தின் கொடுமையை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் விடயமாக காணப்படுகின்றன. இது  பிரான்சிஸ் அடிகளாரின் கதை —————— மூன்று தாசப்தகாலம் நீடித்த அந்த ஈவிரக்கமற்ற யுத்தம் மே 18 ம் திகதி முடிவிற்கு வந்தது.ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்படுகின்றது.ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். இது இன அடிப்படையில் இடம்பெற்ற போர்.தமிழ் சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் காணப்பட்ட சுதந்திர தேசத்திற்கான விருப்பம், ஆயுத பிரிவினைவாத கிளர்ச்சி குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ...

Read More »

‘ஐ.எஸ்-இலிருந்து மூவர் அனுப்பிய பணத்தை, படுக்கையறையில் பத்திரமாய் வைத்தேன்!

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்ற இலங்கையைச் சேர்ந்த மூவரால், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 40 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைவதற்காக, சிரியாவுக்குச் சென்ற முதலாவது இலங்கையர்கள் என்று கருதப்படும் மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட், அவரின் சகோதரரான சர்பாஸ் நிலாம் மற்றுமோர் இலங்கையரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் ஆகியோராலேயே அந்தப் பணம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம்!

ஆஸ்திரேலியாவில் உணவுப்பொருட்களை பாதுகாப்பதில் விதிமுறைகளை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் பெர்த் நகரின் தெற்கு வீதியில் ‘தி கரி கிளப் இந்தியன் ரெஸ்டாரண்ட்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நிலிஷ் டோக்கே என்பவர் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகம் உணவுப்பொருட்களை பாதுகாப்பதிலும், தூய்மையான தரத்தில் உணவக வளாகத்தை பராமரிப்பதிலும் தவறியது உள்ளிட்ட 7 விதிமுறைகளை மீறி இருக்கிறது. சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு ...

Read More »

உலக கோப்பை கிரிக்கெட்டை வர்ணனை செய்யும் பிரபலங்கள்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யும் 24 பிரபல வர்ணனையாளர்களை ஐசிசி வெளியிட்டுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் களமிறங்கி பலப்பரிட்சை செய்ய உள்ளன. இதற்காக இந்திய அணி 23ம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. உலக கோப்பை இந்திய அணியில் டோனி, ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, விஜய் ஷங்கர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்தீப் ...

Read More »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்கால முதலாவது நேரடி அவை அமர்வு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்கால முதலாவது நேரடி அவை அமர்வு இன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட வரலாற்று மையமான (National Constitution Centre) அமெரிக்க அரசியல் சாசன கூடத்தில், தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச இந்த அமர்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் தேர்வாகிய உறுப்பினர்கள், தமிழீழம் நோக்கிய தமது உறுதிப்பாட்டுடன் அரசவை பிரதிநிதிகளாக சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளனர். அரசவைத்தலைவர், உதவி அரசவைத்தலைவர், பிரதமர் ஆகியோரை அரசவை பிரதிநிதிகள் ஜனநாயக முறைப்படி இந்த அமர்வின் போது ...

Read More »

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் உருத்திரகுமாரன்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் தெரிவு  செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட National Constitution Centre வரலாற்றுக் கூடத்தில் அரசவை அமர்வு இடம்பெற்று வருகின்றது. இதில் பிரதமருக்கான பொறுப்புக்கு இருவரது பெயர்கள், மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட நிலையில்,ல் அரசவை அமர்வு இடம்பெற்று வருகின்றது. பெரும்பான்மை வாக்குகளால் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரதமராக தெரிவு  செய்யப்பட்டுள்ளார். போராட்டத்தில் பதவிகள் வழங்கப்படுவதல்ல. பொறுப்புக்களே வழங்கப்படுகின்றன. பதவிகள் யாவும் இங்கு வேசங்களே. நாம் அனைவரும் விடுதலைக்கான களத்தில் போராளிகளே என பிரதமர் வி.உருத்திரகுமாரன்  ...

Read More »

முதல் குழந்தையை பெற்றெடுத்த கொச்சிக்கடை குண்டுதாரியின் மனைவி!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அலாவுதீன் அகமட் முவாத்தின் என்ற பயங்கரவாதியின் மனைவி, முதலாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைகளின் போதே, இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்து இரண்டு வாரங்களில் – 22 வயதுடையவரான தற்கொலைக் குண்டுதாரியின், மனைவிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. குண்டுதாரி முவாத்தின் தந்தையான 59 வயதுடைய அகமட் லெப்பை அலாவுதீன், நீதிமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டார். தனது மகன் 14 மாதங்களுக்கு ...

Read More »

இன்னலுக்குள்ளாகியிருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்!

இலங்­கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற கொடூ­ர­மான குண்­டுத்­தாக்­கு­தல்கள் பயங்­க­ரத்­திற்கு எதி­ரான உல­க­ளா­விய போர் தொடர்­பி­லான விவா­தத்தை மீண்டும் மூள வைத்­தி­ருக்­கி­றது. அந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்­லா­மிய அரசு இயக்கம் உரிமை கோரி­யி­ருக்கும் நிலையில் சிரி­யா­வி­லி­ருந்த இஸ்­லா­மிய அரசின் முன்னாள் இராச்­சி­யத்­துடன் இலங்கைக் குண்­டு­தா­ரி­க­ளுக்கு இருந்த தொடர்­புகள் குறித்து உலகம் பூரா­க­வு­முள்ள கல்­வி­மான்­களும், அதி­கா­ரி­களும் ஆராய்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். குண்­டு­தா­ரி­களில் குறைந்­தது இரு­வ­ரா­வது சிரி­யா­விற்குச் சென்று வந்­தார்­க­ளென்று நம்­பப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களின் உல­க­ளா­விய பரி­மா­ணங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தற்­போது ...

Read More »

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் !

தகவல் தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவில் அவசர நிலையை ஜனாதிபதி டிரம்ப் பிரகடனம் செய்தார். சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக ஹூவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக ...

Read More »