உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யும் 24 பிரபல வர்ணனையாளர்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் களமிறங்கி பலப்பரிட்சை செய்ய உள்ளன. இதற்காக இந்திய அணி 23ம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது.
உலக கோப்பை இந்திய அணியில் டோனி, ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, விஜய் ஷங்கர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்தீப் பாண்டியா, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், பந்து வீச்சை கட்டுக்குள் கொண்டு வந்து பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 24 வர்ணனையாளர்களின் பெயர்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா சார்பில் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் வர்ணனை செய்வோரின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் மைக்கல் கிளார்க், குமார் சங்ககரா (இலங்கை), பிரிட்டன் மெக்கலம் (நியூசிலாந்து), ஷான் பெல்லாக் (தென் ஆப்பரிக்கா), மைக்கல் ஹோல்டிங் (வெஸ்ட் இண்டீஸ்), கிரீம் ஸ்மீத் (தென் ஆப்பரிக்கா), வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்), நாசர் உசைன் (இங்கிலாந்து), சைமன் டோல் (நியூசிலாந்து), மைக்கல் சிலேட்டர் (ஆஸ்திரேலியா), மார்க் நிகோலஸ் (இங்கிலாந்து) உள்ளிட்ட 24 வர்ணனையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.