செய்திமுரசு

ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்!

ஜனா­தி­பதி தேர்தலுக்­கான கட்சி வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்தும்  திரு­விழா கோல­க­ல­மாக இடம் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. பொது­ஜன பெர­முன உத்­தி­யோகபூர்­வ­மாக தனது வேட்­பா­ளரை அறி­வித்­து­விட்­டது. அமைச்சர் சஜீத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­துபோல்  ஐக்­கிய தேசி­யக்­கட்சி பது­ளையில்  நடத்­திய வர­வேற்பு வைப­வமும்  இரு பிர­தான கட்­சி­களின் முடிவை அறி­வித்த நிலையில்  தமிழ்மக்கள் இந்த ­வேட்­பா­ளர்கள் தொடர்பில் என்ன முடிவு எடுக்­கப்­பே­ா கி­றார்கள். தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு இவர்­களில் எந்த வேட்­பா­ளரைக் கைநீட்­டிக்­காட்­டப்­போ­கி­றது என்­பதை அறி­வதில்  மக்கள் ஆர்­வ­மாக இருக்­கி­றார்கள்.  அது­போ­லவே போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களும் கட்­சி­களும் கூட்­ட­மைப்பின் முடி­வுக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதும் சரி­யான கணிப்­பாக இருக்கும். ...

Read More »

யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தினரின்  கடையொன்றில்  இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து இந்த தாக்குதலின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, வல்வெட்டித்துறை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்!

சிறிலங்காவிற்கு  வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட்  இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உதிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு தொகுதியினர் மூன்று கட்டங்களாக வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் மீண்டும் சுய விருப்பின் ...

Read More »

அமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப்

கிரீன்லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க எண்ணிய அதிபர் டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன் லேண்ட் என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. 22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது. இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி!

ஹாங்காங்கில் கைதிகள் ஒப்படைப்பு மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் நேற்று பேரணி நடை பெற்றது. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது. இதனால், கைதிகள் பரிமாற்ற ...

Read More »

13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள 13 பேரும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் அவுஸ்திரேலிய காவல் துறையின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 13 பேரும் விமான நிலைய ...

Read More »

அரசியல்வாதி கோட்டாவின் அவலம்!

சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி, சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சில ஆண்டுகளாகக் கூறிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார். அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, அழைத்துப் பேசியிருந்தார் கோட்டாபய ராஜபக்‌ஷ. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அரசல்புரசலாகத் தகவல்கள் வெளியானதும் சித்தார்த்தன், ஊடகங்களிடம் உண்மையைக் கக்கினார்.  அதில், “தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே, தம்மால் வெற்றிபெற முடியும். ஆனாலும், அனைத்து ...

Read More »

பலுசிஸ்தான்: மசூதியில் குண்டு வெடித்து 5 பேர் பலி!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவின் புறநகர் பகுதியில் குச்லாக் என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை பிராத்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த மசூதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறை  ...

Read More »

சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா!

சிறிலங்காவுக்கான  பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா ஹூல்ரன் அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.   இதேவேளை, சிறிலங்காவுக்கான  பிரித்தானியாவின் தூதுவராக பணியாற்றிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இடமாற்றம் பெற்று சென்ற நிலையிலேயே புதிய தூதுவராக சரா அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சரா அம்மையார், சில தினங்களில் பதவியை பொறுப்பேற்கவுள்ளார். ஹூல்ரன் அம்மையார் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் துணை இயக்குநராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது!

பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது  மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என நாடாளுமன்ற  உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலிலேயே நாடாளுமனற உறுப்பினர் இதனை தெரிவித்தார். பலாலி ...

Read More »