செய்திமுரசு

நியூஸிலாந்து – கொரோனா தொற்று நீங்கியது!

நியூஸிலாந்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய எவரும் இப்போது இல்லை என்று நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டன் அறிவித்துள்ளார். நியூஸிலாந்தில் 1,504 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் 22 பேர் மரணமடைந்தனர். எஞ்சிய அனைவரும் முற்றாக குணமடைந்துள்ளர். இந்நிலையிலேயே 75 நாட்கள் ஊரடங்கினால் முடக்கப்பட்டிருந்த தமது நாடு அபாய எச்சரிக்கையில் இருந்து முன்னோக்கி (லெவல் -1க்கு) வந்துள்ளது என்றும், நாளை (09) முதல் நாடு வளமைக்கு திரும்பும் எனவும் ஜசிந்தா அறிவித்துள்ளார். நியூஸிலாந்தில் இறுதியாக மே 22ம் திகதி கொரோனா தொற்றாளி ...

Read More »

உலக நன்மைக்கு தடுப்பூசி தருவோம்- சீன அதிகாரி தகவல்

வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும் என அதிகாரி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் பீஜிங்கில் நேற்று கூறுகையில், “வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும்” என்று குறிப்பிட்டார். இதற்கிடையே பீஜிங்கில் சீன அறிவியல், தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் ...

Read More »

இன்று முதல் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம்

 தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று(08) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தல் தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு பகுதியினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, அதன் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.

Read More »

ஜீவன் ஹூல்லை வெளியேற்றும்படி கோரிக்கை!

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் அவரை தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஜெயந்த சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்த சமரவீர தெரிவித்ததாவது, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை போல நடத்தையில் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அவர் இறுதியாக நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பைக் குறைத்து மதிப்பிட்டுள்ளார். தேசிய ...

Read More »

அவுஸ்திரேலிய அரசின் மதிப்புமிகு விருது பெறும் தமிழர்கள்

மகாராணியின் பிறந்தநாள் 2020 விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போலவே ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத் தன்மையை இந்த வருட Queen’s Birthday விருது பட்டியலும் பிரதிபலிக்கிறது. இதன்படி முன்னாள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக தொண்டர்கள் என சுமார் 738 ஆஸ்திரேலியர்கள் Queen’s Birthday விருது பெறுவோர் பட்டியலில் இடம்பிடித்து அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெறுகிறார்கள். மேலும் 128 பேர் சிறப்பு விருது பெறுகிறார்கள். Order of Australia விருதை பெறுபவர்களில் தமிழர்களான Dr.சிதம்பரப்பிள்ளை தவசீலன், Dr.ஆறுமுகம் அழகப்பா ...

Read More »

தனிச் சிங்கள பௌத்தர்களைக் கொண்ட செயலணி என்ன செய்யும்?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னதாக, இரண்டு ஜனாதிபதி செயலணிகளை உருவாக்குதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறார். முதலாவது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கமான, பண்பான, சட்டத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி. இரண்டாவது, கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர், பௌத்த பீடங்களின் உயர்மட்டக் குழுவை மாதம் தோறும் சந்தித்து வருகிறார் அவ்வாறான இரணடாவது சந்திப்பு அண்மையில் நடந்த போது, கிழக்கில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ...

Read More »

மதவாத அரசியலின் ஊடகமா தொல்பொருள் திணைக்களம்? கலாநிதி ஜனகன்

அமரிக்காவில் கறிப்பினத்தவருக்கு எதிரான அராஜகங்களுக்காக குரல்கொடுக்கும் இலங்கையர்கள், நம் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கல் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன: தொல்பொருள் திணைக்களம் தொடர்ச்சியாக மதவாத அரசியலின் ஓர் ஊடகமாக பயன்படுத்தப்படுகின்றது. காலாகாலமாக தொல்பொருள் திணைக்களம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் புறக்கணித்துச் செயற்பாடுவது ஒரு தொடர்கதையாகத் தொடர்கிறது. ...

Read More »

புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்!

மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பலமிக்க தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, அவசரமானதும் கட்டாயமானதுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியை நிறைவேற்றினால் வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவார். இந்த விடயத்தில் எமது முழுமையான ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்தமையைப் பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ...

Read More »

சிறிலங்காவில் ஆகஸ்ட் முற்பகுதியில் தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் நடைபெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை ஆகஸ்ட் முற்பகுதியில் நடத்துவது குறித்தே தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துவருகின்றது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் திங்கட்கிழமை இது குறித்த இறுதி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.வேட்பாளர்களின விருப்ப்பிலக்கங்களை நாளை வெளியிடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார் . தேர்தல்வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய இம்முறை மரப்பெட்டிகளால் தயாரிக்கப்பட்ட பெட்டிகளை ...

Read More »

அவதூறு வழக்கில் இம்ரான்கானிடம் விளக்கம் கேட்ட பாக். நீதிமன்றம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்கில், அவரிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இம்ரான்கான் தங்கள் குடும்பத்தின் மீது அவதூறு சுமத்தியுள்ளார் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் ஷாபாஷ் ஷெரீப் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் கடந்த மூன்று வருடமாக நடந்து வருகிற இந்த வழக்கில் ஜூன் 10-ம் திகதிக்குள் இம்ரான்கான் எழுத்து மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ...

Read More »