நியூஸிலாந்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய எவரும் இப்போது இல்லை என்று நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டன் அறிவித்துள்ளார்.
நியூஸிலாந்தில் 1,504 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் 22 பேர் மரணமடைந்தனர். எஞ்சிய அனைவரும் முற்றாக குணமடைந்துள்ளர்.
இந்நிலையிலேயே 75 நாட்கள் ஊரடங்கினால் முடக்கப்பட்டிருந்த தமது நாடு அபாய எச்சரிக்கையில் இருந்து முன்னோக்கி (லெவல் -1க்கு) வந்துள்ளது என்றும், நாளை (09) முதல் நாடு வளமைக்கு திரும்பும் எனவும் ஜசிந்தா அறிவித்துள்ளார்.
நியூஸிலாந்தில் இறுதியாக மே 22ம் திகதி கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.