நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் நடைபெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலை ஆகஸ்ட் முற்பகுதியில் நடத்துவது குறித்தே தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துவருகின்றது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
திங்கட்கிழமை இது குறித்த இறுதி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.வேட்பாளர்களின விருப்ப்பிலக்கங்களை நாளை வெளியிடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
தேர்தல்வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய இம்முறை மரப்பெட்டிகளால் தயாரிக்கப்பட்ட பெட்டிகளை பயன்படுத்தப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் மற்றும் விருப்புவாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.