அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்களை சிறிலங்கா கடற்படைக்கு, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் வழங்கியது. அதன்படி, அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையால் 2 பி.சி.ஆர் இயந்திரங் களும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 பி.சி.ஆர் பரிசோ தனை இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன, இந்த பி.சி.ஆர் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் ...
Read More »செய்திமுரசு
நியூஸிலந்தில் சமூக அளவில் ஒருவருக்குக் கிருமித்தொற்று
நியூஸிலந்தில் சமூக அளவில் ஒரு கிருமித்தொற்றுச் சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தென் பிசிபிக் நாடான நியூஸிலந்து கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் உருவாகிக்கொண்டிருக்கும் சமயத்தில் பாதிக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதால் எளிதில் அவரைத் தனிமைப்படுத்த முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் இம்மாதம் 14ஆம் தேதி கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்ககூடும் என்று நம்பப்படுகிறது. நியூஸிலந்துத் தேர்தலில் திருவாட்டி ஆர்டனின் தொழிற்கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்று ஒரு நாள் ...
Read More »நியூசிலாந்தின் கடற்கரையில் பாறைகளில் சிக்கி 10க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் பலி!
நியூசிலாந்து கடற்கரை பகுதியில் பாறைகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோரமண்டல் தீபகற்ப பகுதியிலுள்ள கடற்கரை பகுதிக்கு வந்த சுமார் 50 திமிங்கலங்கள் எதிர்பாராதவிதமாக பாறைகளில் சிக்கின. இவற்றை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுமார் 25 திமிங்கலங்கள் மீட்கப்பட்டு ஆழ்கடலுக்குள் விடப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டவை பலியானதாக அந்நாட்டு மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Read More »எந்தவிதமான எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் 20வது திருத்தம் நிறைவேற்றப்படுமாம்!
எந்த தரப்பிலிருந்தும் எந்தவிதமான எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவது குறித்து உறுதியாகவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எந்த தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பு வந்தாலும் நாங்கள் அரசமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் சமர்ப்பித்து அது ஒருமுற்போக்கான சட்டமாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வோம் என அவர் சண்டே ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலரே 20வது திருத்தம் குறித்து எதிர்ப்பு வெளியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் எவருக்கும் தங்கள் கருத்தினை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமுள்ளது என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நிச்சயமாக 20வது திருத்தம் ...
Read More »5000 ரூபா நிதி வழங்க அரசாங்கம் தீர்மானம் ?
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்களுக்கு 5000 ரூபா வழங்க அரசாங்கம் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20 ஆம் திகதி முதல் 5 ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.
Read More »நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்
நியுசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகின்றார். நியூசிலாந்து வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட முதலாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகின்றார். இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியிருந்தது. ஆக்லான்டில் போட்டியிட்ட இவர், தேர்தலில் ...
Read More »விக்டோரியாவில் ஒரே ஒரு நோய்த்தொற்றுச் சம்பவம்!
சில மாதங்களாகவே நோய் அதிகமாகப் பரவிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரேயொரு நோய்த்தொற்றுச் சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது. ஜூன் மாத ஆரம்பத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் விக்டோரியாவின் மெல்பர்ன் நகரில் பதிவாயின.
Read More »பிரான்சில் வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொலை
பிரான்சில் நபிகள் நாயகம் தொடர்பான கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை, தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பள்ளி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த ஆசிரியர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால் கோபமடைந்த ஒரு நபர் அவரை கொன்றதாக தெரியவந்தது. குற்றவாளியை காவல் துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த ...
Read More »குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரராக நிசாந்த டி சொய்ஸா
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரராக சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சர்(SSP) நிசாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல் துறை மா அதிபர் நுவான் வெதசிங்க மேல் மாகாணத்துக்கான பதில் பிரதி காவல் துறை மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.
Read More »நியுசிலாந்து பொதுத்தேர்தல்- ஜசின்டா ஆர்டெனின் கட்சி முன்னிலையில்
நியுசிலாந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசின்டாஆர்டெனின் தொழில்கட்சி வெளியாகியுள்ள ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. ஜசின்டா ஆர்டெனின் மூன்றுவருட பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகத்தொடங்கியுள்ளன. இதுவரை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி பிரதமரின் தொழில்கட்சி 50வீத வாக்குகளை பெற்றுள்ளது.எதிர்கட்சியான தேசிய கட்சிக்கு 25 வீத வாக்குகளை பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் பிரதமருக்கு சாதகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதமர் ஜசின்டா ஆர்டெனிற்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்விகளும் நியுசிலாந்தில் காணப்படுகின்றன.
Read More »