அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக தவித்து வருகிறது. உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவின் கோர தாண்டவத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இது அமெரிக்காவின் 3 போர்களில் பலியானோர் எண்ணிக்கையைவிட அதிகமாகும். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவில் 4 லட்சத்து ...
Read More »செய்திமுரசு
வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து பேச்சு
சிறிலங்கா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும் சிறிலங்கா ஜனாதிபதிக்கும் இடையில் இன்று(24) நடைபெற்ற கலந்தரையாடலின்போதே, இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இச்சந்திப்பு பலனளிக்கும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், தொழில்நுட்ப அறிவு குறித்தும் இருநாட்டு தலைவர்கள் கருத்துகளை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் விவசாய பொருளாதார செயற்பாடுகள் சிறிலங்காவுடன் ...
Read More »மைத்திரி சிக்கினார்; ரணில் தப்பினார்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (23) கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில், அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதைக் கையளித்தார். அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
Read More »இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம்
ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் நட்பு சக்திகளாகிய ...
Read More »அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த தடையை விலக்கிக்கொள்வதாக முகநூல் நிறுவனம் அறிவிப்பு
ஊடக விதிகளை திருத்தி அமைக்க அவுஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக்கொள்ளப்போவதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது. முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு முகநூல் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது சட்டபூர்வ கட்டாயம் என்ற அவுஸ்ரேலிய அரசின் விதிகளுக்கு முகநூல் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த நிலையில் இருதரப்பும் பேசி சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதால், பொதுநலன் சார்ந்த ஊடக செய்திகள் இனிமுகநூலில் வெளியாகும் என அதன் அவுஸ்ரேலிய ...
Read More »சீன அதிபர் ஜின்பிங் இந்தியா பயணம்
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. பிரிக்ஸ் மாநாடு இந்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு சீனா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, “இந்த ஆண்டு கூட்டத்தை நடத்துவதில் இந்தியாவை நாங்கள் ஆதரிக்கிறோம். தகவல் தொடர்பு மற்றும் ...
Read More »அவசர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத்திற்கு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அம்பியுலன்ஸ் வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து வைத்திய சாலையின் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More »தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றியவர் கைது!
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஊடகங்களில் வெளியிட்ட சந்தேக நபர் ஒருவரை காவலர் துறையால் கைது செய்துள்ளனர். வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே தலைவர் பிரபாகரனின் காணொளியொன்றை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி யமை ...
Read More »கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலும், இதயமும் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று முதலில் ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. பிறகு சிறுநீரகத்தையும் இந்த வைரஸ் மிக வேகமாக தாக்கும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் குணம் அடைந்தாலும் அவர்கள் எதிர்காலத்தில் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஒரு ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்பட்டு ...
Read More »ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இந்த நகல் பிரேரணை அமைந்திருக்கின்றது. கடந்த வருடங்களில் ஏமாற்றப்பட்டதைப்போல இந்த வருடமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது. ஜெனிவா கூட்டத் தொடர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் இம்முறை ஏற்படுத்தியிருந்தமைக்கு பல காரணங்கள் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			