செய்திமுரசு

ஆதரித்து வாக்களித்த அ.இ.ம.கா உறுப்பினர்கள் இருவர் மீதும் விசாரணை

20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படவுள்ளது. ;கட்சியின் அரசியல் ; உயர்பீடம் நியமித்த, சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டின் தலைமையிலான மூவர் கொண்ட ஒழுக்காற்றுகுழு அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து விசாரிக்க தீர்மானித்துள்ளது . ;நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமகவே இந்நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும் மிக விரைவில் குறித்த விசாரணைகள் இடம்பெறும் எனவும், ஒழுக்காற்றுக்குழுவின் ...

Read More »

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி பலனளிக்கிறது – மாடர்னா நிறுவனம்

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரசை ஒழிக்க உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. எனினும் உலகளாவிய தடுப்பூசி வினியோகம் இன்னும் இறுக்கமாக இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கே உலகின் பெரும்பகுதி போராடி வருகிறது. அதேவேளையில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் ...

Read More »

அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் எதுவும் இல்லையாம்!

இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4 ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது. அத்துடன், கொழும்பில் ...

Read More »

இலங்கைத் தீவில் ஒரு சீன நகரம்

இலங்கையின், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்ததும், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டதுமான கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், பாராளுமன்றத்தில் 91  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையிலேயே 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் முடங்கிக் கிடக்க, மக்களின் கவனம் அந்த அச்சத்தில் இருக்க, பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை ராஜபக்‌ச அரசாங்கம் இலகுவாக முன்னகர்த்தி விட்டது. கொரோனா அச்சம் இதற்காகவே இந்தக் ...

Read More »

கொரோனாவால் இறப்போரில் அதிகளவானோர் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்

கொவிட்-19 நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளில் பெரும் சதவீதமானோர் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணரும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளருமான மருத்துவர் விந்தியா குமாரபெலி தெரிவித்துள்ளார். நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோர் குறித்து சுகாதார அமைச்சு விஷேட கவனம் செலுத்தி வருகிறது. தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளருக்கு மருத்துவ கிளினிக்குகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் கிளினிக்குகள் மூலம் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்க பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது ...

Read More »

சீரற்ற காலநிலை காரணமாக திருமலையில் 3 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்

திருகோணமலையிலுள்ள திருக்கடவூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகு சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த படகில் 3 மீனவர்கள் இருந்ததாகவும் மாயமான படகைத் தேடி 20 படகுகள் காணாமல் போன பிரதேசத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மீன்வளத் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்கு தாம் அறிவித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Read More »

உகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கலாம்

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறையின் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. இந்த வைரசின் அடுத்தடுத்த அலைகளால் இன்றளவும் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்ற ...

Read More »

தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தாயகத்திலும் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் நாதியற்று கலங்கி நின்ற போது, தென்னிலங்கையும், அதன் ஆதரவு சக்திகளும் பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து நிறைவுக்கு கொண்டு வந்த போரின் மூலம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தியதை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய கருத்து வருமாறு: 2009ஆம் ...

Read More »

’’கலப்பின அரிசியின் தந்தை’’ காலமானார்

“கலப்பின அரிசியின் தந்தை” யான யுவான் லாங்பிங் காலமானார் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இறக்கும்போது அவருகு்கு வயது  91 ஆகும்.   அவரது மறைவுக்கு இலங்கையிலு சீன தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த இரங்கல் செய்தியில், “யுவானின் கடின உழைப்பு காரணமாக, சீனாவின் மொத்த அரிசி உற்பத்தி 1950இல் 56.9 மில்லியன் தொன்னிலிருந்து 2017.ல் 194.7 மில்லியன் தொன்னாக உயர்ந்தது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 300 பில்லியன் கிலோ அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வருடாந்த அதிகரிப்பு 60 மில்லியனுக்கும் அதிகமான ...

Read More »

யாழில் 8 மாத கர்ப்பிணியை கொரோனா மையத்தில் இரவு வேளை இறக்கிச் சென்ற சுகாதார அதிகாரிகள்!

எட்டு மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண்ணை எந்த ஏற்பாடுகளும் இன்றி உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினர் இரவு 8.30 மணியளவில் வட்டுக்கோட்டை கொரோனா தடுப்பு மையத்தில் கொண்டு சென்று இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் பொறுப்பற்ற இந்தச் செயலால் அந்தக் கர்ப்பிணிப் பெண் பல அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும் அத்துடன் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல வேண்டிய இக்கட்டான நிலை வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மைய நிர்வாகத்துக்கு ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது. நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது: உடுவில் ...

Read More »