செய்திமுரசு

அஸ்ட்ராசெனிகா என்ற பெயரில் போலியான தடுப்பூசிகள் வழங்கப்படலாம்..!

ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாது,  வியாபாரிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்ளும் தடுப்பூசிகளில் போலியான தடுப்பூசிகளை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தொற்றுநோய்கள் குறித்த நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார். நாட்டில் ஆறு இலட்சம் பேருக்கு ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சி குறித்தும், வியாபாரிகளினூடாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எடுக்கும் ...

Read More »

சீனாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டி உள்ளது. அங்கு குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 10 பேருக்கு உள்நாட்டில் பரவும் கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேறு முக்கிய நகரங்களில் 14 ...

Read More »

மெல்பன் நகரின் முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

விக்டோரியாவில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மெல்பனுக்கான முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளதாக acting premier James Merlino அறிவித்துள்ளார். புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள எவரும் முதியோர் பராமரிப்பு இல்லங்களைச் சேர்ந்தவர்கள் அல்லவென தெரிவிக்கப்படுகிறது. Highlights விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுகிறது. மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது. அதேநேரம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இனவாதத்தை அதிகரித்திருக்கும் கொரோனா பெருந்தொற்று

ஈராக்கிலிருந்து வெளியேறிய முகமது அல்-கபாஜி ஆஸ்திரேலியாவில் தங்கள் குடும்பத்தினருடன் அரசியல் தஞ்சம் கோரிய போது அவரது 13 ஆகும். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை ஆஸ்திரேலியாவிலேயே அவர் கழித்திருக்கிறார். இந்த நிலையில், அவரை விமான நிலையத்தில் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர், அவரைப் பார்த்து, “எந்த நாட்டிலிருந்து வந்தாயோ அந்த நாட்டுக்கே திரும்பிப்போ,” எனக் கத்தியிருக்கிறார். “யாரோ ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள என்னைப் பார்த்து வந்த இடத்திற்கு திரும்பிப்போ என்பது அவமானமாக உள்ளது,” என்கிறார் முகமது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று சூழல் ஏற்கனவே ...

Read More »

மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சமீபத்திய புதிய வைரஸ் பிறழ்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து கடந்த மாதம் 27 அன்று அமுல்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடு நாளைய தினம் வியாழக்கிழமை இரவு முடிவடையவுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டுப்பாடுகள் நாளை முதல் ஜூன் 10 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read More »

தமிழ் நாட்டின் எல்லையை விளங்கிக்கொள்ளல்

தமிழ் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பத்துவருடங்களுக்கு பின்னர் மீளவும் திராவிட முன்னேற்ற கழகம், அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அனைவரது பார்வையும் தீடிரென்று தமிழ் நாட்டின் பக்கமாக திரும்பியிருக்கின்றது. கருணாநிதியை துரோகியென்று கூறுபவர்களை தவிர, அனைத்து அரசியல் தரப்பினருமே, பாரபட்சமில்லாமல், ஸ்டாலின் மீதான எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். இது ஒரு பக்கமென்றால் – இன்னொரு பக்கமும் இருக்கின்றது. அதாவது, சீமான் மூன்றாவது சக்தியாக வந்துவிட்டதான கொண்டாட்ட மனோநிலை. இப்போதும் விடுதலைப் புலிகளை தங்களின் அரசியல் முதலீடாகக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், சீமானை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ...

Read More »

கொரோனாவைக் காட்டி கூட்டமைப்பினர் வெளிநாடுகளில் நிதி பெற முயற்சியாம்!

தமிழ்த தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமண கோரிக்கை விடுத்துள்ளார். ‘கொவிட் -19’ இற்கான தடுப்பூசி உட்பட மருத்துவ உபகரணங் களைக் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் தயாராகவே இருக்கின்றனர். இதற்கான அனுமதியை அரசு வழங்கினால் திட்டத்தை செயற்படுத்தக்கூடியதாக இருக்கும்” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நிதி ...

Read More »

மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியில் இருந்து இன்று புதன்கிழமை காலை 10 மணிவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்து ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் காத்தான்குடி சுகாதார ...

Read More »

சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் ஒருவருக்கு பாதிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் ஒருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் மனிதர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் ஒருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங் நகரை சேர்ந்தவர் ஆவார். தற்போது அவரது உடல்நிலை சீராக ...

Read More »

இலங்கைத்தீவில் சீன சகாப்தம்?

சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல.ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில் இலங்கைத் தீவின் கோட்டை ராச்சியத்தை சீனக் கப்பற்படை கைப்பற்றியது.அப்போது கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவர் ஒரு தமிழன். அழகேஸ்வரர். அவர் யாழ்ப்பாணத்து இராச்சியத்தை வெற்றி கொண்டார். அதனால் கிடைத்த பலம் காரணமாக கோட்டை ராச்சியத்துக்கும் அரசனாகினார். அக்காலகட்டத்தில் சீனாவின் புதையல் கப்பல் என்றழைக்கப்படும் ஒரு கப்பல் படையணி இலங்கை தீவை ஆக்கிரமித்தது. புதையல் கப்பல் என்பதன் பொருள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து ...

Read More »