செய்திமுரசு

சிறிலங்காவில் கொரோனா வைரஸிற்கு இலக்கான ஒரு வயது குழந்தை!

சிறிலங்காவில்  அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களில் ஒரு வயதும் 5 மாதங்களுமான குழந்தையும் உள்ளடங்குவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்த குழந்தையின் தாய்க்குத் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் தந்தைக்கும் கொரோனா தொற்றியுள்ளதா என சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் இத்தாலியில் இருந்து வருகைத்தந்தவர்களாகும். வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்காவில்  அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரவு வரையில் 43ஆக அதிகரித்துள்ளது. ...

Read More »

பரசிட்டமோல், கோழி சூப், எலுமிச்சைச் சாறு கொரோனாவிலிருந்து மீண்ட வைத்தியர்!

பிரிட்டனில் தெற்கு லண்டனிலுள்ள கென்னிங்டனைச் சேர்ந்தவர் டாக்டர் கிளார் ஜெராடா. 60 வயதான இவர் பொது மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் (ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ்) முன்னாள் தலைவர் ஆவார். இவர் நியூயார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்று லண்டனுக்குத் திரும்பியபோது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய்த் தொற்றின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சில நாள்கள் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் டாக்டர் கிளார். கடுமையான காய்ச்சல், நடுக்கம், தொண்டயில் புண், தலைச்சுற்றல், மூட்டுகளில் வலி, தலைக் குத்தல், தொடர்ந்து இருந்த இருமல் ...

Read More »

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கை அறிமுகப்படுத்தும் அதிரடி ஆயுர்வேத மூலிகை மருந்து!

கொரோனா வைரஸ் பற்றிய கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது சீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை அல்லது 4 உருண்டைகளை பயன்படுத்துவது பொருத்தமானது என ஆயர்வேத மருந்தக கூட்டத்தாபனத்தின் தலைவர் திருமதி. சாகல அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த மருந்துகளுக்கு மேலதிகமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மல்லி, இஞ்சி உட்பட பஸ்பங்கு எனப்படும் சிங்கள ஆயர்வேத ஐந்து வகை ஒளடதம் மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தொண்டையில் வலி, தும்மல், ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கு பயன்படுத்தும் சிகிச்சை ...

Read More »

போலி ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம்!

கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாகத் தெரிவித்து இணையத்தளங்களில் வெளியாகும் ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள் தொடர்பிலான தகவல்களை நம்ப வேண்டாம் என, ஆயுர்வேத திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது . அங்கீகரிக்கப்படாத மருத்துவக் குறிப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக சிலர் பரப்பிவருவதாக, ஆயுர்வேத ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார் போலி மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார். தற்போது பரவும் Covid19 எனப்படும் கொரேனா வைரஸுக்கான சிகிச்சை வழங்க ஆயுர்வேத வைத்தியர்கள் என்ற போர்வையில், பலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆயுர்வேதப் பொருட்களை ...

Read More »

உலக முழுவதும் கரோனா வைரஸால் 179,000 பாதிப்பு!

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 179,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, “ உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 11,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கோவிட் காய்ச்சலுக்கு 1, 79,00 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செவ்வாய்க்கிழமை உலகம் முழுவதும் 475 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் உலக முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ...

Read More »

கொரோனாவை ஓழிக்க ஏற்கனவே இருக்கும் சில மருந்துகள் பயன்படலாம்!

ஏற்கனவே இருக்கும் சில மருந்துகளே கொரோனாவை ஓழிக்க பயன்படலாம் என்கிறார்கள் அவுஸ்திரேலிய மருத்துவர்கள். சீனாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பிய சீனர்கள் சிலர், சீனாவில் சில மருந்துகள் கொரோனாவுக்கெதிராக பயன்படுத்தப்பட்டு பலனளிப்பதாக தகவல் அளித்துள்ளார்கள். அவர்கள் கூறிய செய்தியின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவில் வாழும் சீன நோயாளிகள் சிலருக்கு அந்த மருந்து கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கப்பட்ட அந்த நோயாளிகள் அனைவரும் நல்ல முன்னேற்றம் காட்டியிருகிறார்கள். அந்த மருந்து, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து! ஆக, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சை மற்றும் மலேரியாவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என ...

Read More »

யாழ்.மாநகர முதல்வர் ஆனல்ட் பொதுத் தேர்தலில் வேட்பாளராக இணைப்பு

யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின்) சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது. தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், ...

Read More »

‘பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’

தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனம் கண்டது. அதன் பின்னரான, ஓராண்டு காலம் நிறைவு பெறுவதற்குள் (08 ஏப்ரல் 2010) 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 13 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தையும் பெற்று, மொத்தமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் பின்னர், 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல், 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு, 14 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக, ...

Read More »

கொரோனாவுக்கு தீர்வு அமெரிக்க பரிசோதனை தடுப்பூசி?

முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸானது, மிகப் பெருமளவில் மக்களின் உயிர்களை காவுகொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டது. வொஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஓர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி இணையத்தளம் தகவல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு தீர்வாகுமா என்று உடனே சொல்ல முடியாது. அதற்கு சில காலங்கள் ஆகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பரிசோதனைக்கான தடுப்பூசி செலுத்தப்பட்ட 43 வயதான பெண்மணியான ...

Read More »

170 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ளனர்!

இத்தாலி தென்கொரியாவிலிருந்து சிறிலங்கா  வந்த 170 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஈரான் தென்கொரியா ஆகியநாடுகளில் இருந்து மார்ச் முதலாம் திகதி முதல் 16 ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் சிறிலங்கா  வந்த அனைவரையும் அருகில் உள்ள காவல் துறை நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோன வைரசிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். இத்தாலி கொரியாவிலிருந்து நாடு ...

Read More »