செய்திமுரசு

ஊரடங்கைத் தளர்த்தி மக்களை ஆபத்திற்குள் சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது!

கொரோனோ பாதிப்பு முற்றாக நீங்காத நிலைமையில் தேர்தலை நடாத்துவதற்காக ஊரடங்கைத் தளர்த்தி மக்களை ஆபத்திற்குள் அரசாங்கம் தள்ளியிருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி. உமாச்சந்திரா பிரகாஷ் தேர்தலை இலக்கு வைத்து சுயலாப தீர்மானங்களையே இந்த அரசாங்கம் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது. நாட்டில் கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வைத்தியத் ...

Read More »

கொழும்பிலிருந்து பலாலிக்கு கொண்டு வரப்பட்ட 99 கொரோனா சந்தேக நபர்கள்

கொழும்பைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலாலி ராணுவ முகாமில் தனிமைப் படுத்தப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 99 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.அவ்வாறு தனிமைப் படுத்தப் பட்டவர்கள் பலாலி இராணுவ முகாமில் சற்று முன்னர் தங்க வைக்கபபட்டுள்ளனர்.சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More »

கொவிட் 19 அச்சுறுத்தலை வெகு விரைவில் வெற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு

கொவிட் 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தலை வெகு விரைவில் வெற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தற்போதும் கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த வேவையான அனைத்து விஞ்ஞான ரீதியான செயற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போதைய நிலையிலும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணப்படுவதால் மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பினபற்ற வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

வானம் தனது நீல நிறத்தை மீட்டுக்கொண்டது!

ஆதியில் வானம் நீலமாகத்தான் இருந்தது. அண்மையில், வாகனங்களின் புகையும் தொழிற்சாலைகளின் புகையும் இந்த நிறத்தைத் திரித்துவிட்டதால் வானத்துக்கு ஒரு புரிபடாத நிறம். கரோனா காலத்து ஊரடங்கில் வானம் நீல வானமாக மீண்டுகொண்டது. உதயத்துக்குப் பிறகு மேலை வானத்தில் பார்க்காத நீலம் ஒன்று படர்ந்துகொண்டே மெல்ல அடர்வதையும் பார்க்கலாம். இன்ன நிறம் என்று சொல்ல இயலாத பின்புல வெளி ஒன்றில் நேற்றுவரை கட்டிடங்கள் அமுங்கிக் கிடந்தன. இந்தக் கட்டிடக் கலைப் பரிதாபங்களும் இன்று அடர் மஞ்சள், கருஞ்சிவப்பு, வெளிர் பச்சை என்ற வண்ணங்கள் மினுக்க வானத்தின் ...

Read More »

பாதுகாப்பு கவசங்களை சீனா பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கிறது

சீனா, உலகம் முழுவதும் முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை ஆகியவற்றை வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வெள்ளை மாளிகை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி பிரிவு இயக்குனர் பீட்டர் நவரோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், சீனா, உலகம் முழுவதும் முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை ஆகியவற்றை வாங்கி குவித்தது. தேவையை விட 18 மடங்கு அதிகமாக வாங்கியது. முக ...

Read More »

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகிறது

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்கும் முடிவில் இங்கிலாந்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவிதமான விளையாட்டு போட்டிளும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு வர நீண்ட காலமாகும் என அஞ்சப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த மாதம் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றிருந்தது. ஆனால் கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக பயிற்சி ஆட்டத்தை பாதிலேயே நிறுத்திக் கொண்டு சொந்த நாடு ...

Read More »

278 உயிர்கள் பலியெடுக்கப்பட்ட கறுப்புநாள் இன்றாகும் ..!

அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது.  ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன. யாருமே நினையாத, எதிர்பாராத சம்பவம் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த நாள் அதுவாகும். பயங்கரவாதி முஹமட் சஹ்ரான் குழுவினரால் மிருகத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு நாளில் தான் நடத்தப்பட்டன. இன்றுடன் வருடமொன்று நிறைவடைகின்ற போதும், பயங்கரவாதி சஹ்ரானால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் ...

Read More »

சிரேஷ்ட ஊடகவியலாளர் நெடுஞ்செழியன் காலமானார்!

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நல்லதம்பி நெடுஞ்செழியன் (65) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் தலவாக்கலையை பிறப்பிடமாகக் கொண்ட அவர் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார் . தனது ஊடக பயணத்தை தினபதி மற்றும் சிந்தாமணியின் ஊடாக ஆரம்பித்த அவர் பின்னர் சக்தி ஊடக நிறுவனத்தின் செய்தி ஆசிரியராக ஒரு தசாப்த காலத்துக்கு மேல் பணியாற்றினார் பின்பு எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வீரகேசரி வாரவெளியீட்டுப் பிரிவின் மலையக பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். அதன் பின்னர் ...

Read More »

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்தும் திகதியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில் தற்போது இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை குறித்து சுகாதார பணிப்பாளர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்திய பேச்சுவர்த்தையில் ...

Read More »

கொழும்பில் 1010 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினமும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது. முன்னதாக, நேற்று (20) காலையில் 24 நோயாளர்களும், பிற்பகலில் 8 தொற்றாளர்களும் மாலையில் ஒரு தொற்றாளரும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு உள்ளான 98 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இலங்கையில் ...

Read More »