செய்திமுரசு

ஆறுமுகன் தொண்டமானுக்கு நாடாளுமன்றில் இறுதி அஞ்சலி

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கியப் பேழையை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அன்னாரின் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Read More »

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள்

ஐதராபாத் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஐதாராபாத் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும், மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க உதவி புரிந்து வருகிறார்கள். கடந்த 8-ந்திகதி கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கர்ப்பிணி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அதன்பின் ஏராளமான பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தெலுங்காவில் இருந்து வந்த பெண்ணுக்கு நேற்று ஆரோக்கியமான ...

Read More »

இன்றுமட்டும் 134 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டனர்

இலங்கையில் இன்றுமட்டும் 134 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் இன்றும் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியமை இன்றேயாகும். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 732 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More »

தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான்

 இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலில் அவருக்குப் பதிலாக நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.காவின் இளைஞரணி தலைவர் ஜீவன் தொண்டமானை களமிறக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரப் பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் இம்முறை இ.தொ.கா போட்டியிடுகிற நிலையில், இ.தொ.காவின் இத்தீர்மானத்தை அக்கூட்டணியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அக்கட்சியின் உயர்மட்டக் குழு இன்று அறிவித்துள்ளது.

Read More »

ஈழ விடுதலைப் போரின்போது குதிரை மீது உட்கார்ந்திருக்கும் மரணத்தை வரைந்தேன்!- ஓவியர் மருது

வீடு திரும்புதல் எனும் நிகழ்ச்சியும், வீடு திரும்புதல் என்பதன் பொருளும் புராதன காலத்திலிருந்து எல்லாப் பண்பாடுகளிலும் மதிப்போடு பார்க்கப்படுகிறது. தேசத்தின் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு காலாட்படையினராகச் செயல்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஆசுவாசத்துடன் ஊர் திரும்பும் கௌரவத்தைக்கூட இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் அளிக்கத் தவறிவிட்டோம். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வீடு திரும்புவதற்காகப் படும் அல்லல்களைப் பார்த்துப் பார்த்து எதிர்வினையாக ஓவியர் மருது தனது ஸ்கெட்ச் புத்தகத்தில் படங்களை வரைந்துகொண்டிருக்கிறார். ‘எனது கையறு நிலையில் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?’ என்று ...

Read More »

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் வயது (55) சற்று முன்னர் காலமானார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் காலமானார் என, தலங்கம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்!

நான்கு முனைகளால் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இவைகள் பறிபோய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன். முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று நிகழ்த்தினார் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதோடு இவற்றை தடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், மகாவலி எல் வலயத்தின் ஊடாக எப்படி முல்லைத்தீவில் உள்ள காணிகள் அதனுடன் ...

Read More »

கடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’

கொரோனாவும் அது தொடர்பிலான நிகழ்காலம், எதிர்காலத் தாக்கங்கள் குறித்து, ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்த் துறைப் போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், ”ஒரு வருடத்தில் சுமார் 70 இலட்சம் ஏக்கர் கனஅடி மகாவலி நீர், திருகோணமலை, கொட்டியாரக்குடாக் கடலில் கலக்கின்றது” எனத் தெரிவித்திருந்தார். அதாவது, மலையகத்தில் ஊற்றாகி வருகின்ற இந்தச் சொத்து (நன்னீர்) வீணே எவ்வித பிரயோசனமும் இன்றி கடலுடன் சங்கமமாகின்றது. ”இயற்கை அன்னை வழங்குகின்ற ஒரு சொட்டு நீர் கூட, வீணே கடலுடன் கல(ந்து)க்க விடக்கூடாது; அந்த நீரைச் சேமிக்க வேண்டும்; அதற்காக நீர்நிலைகள் ...

Read More »

வீதியில் மயங்கி விழுந்தவர் மரணம்!

திருகோணமலை தலைமையக காவல் துறை  பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று (26) காலை வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது-68) என தலைமையககாவல் துறையினர்  தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்து தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

Read More »

பூஜித்தவின் மனு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பை மீறியுள்ளாரென தீர்ப்பளித்து, தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி, எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, யசன்ன கோதாகொட ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read More »