செய்திமுரசு

’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை

ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன்னர்…. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் என,  பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள், அட்டகாசங்கள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு, நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் எல்லாம், செய்திகளாக வெளியுலகை எட்டுவதில்லை; அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லை. அப்போதுதான், பாலஸ்தீன இளைஞர்கள் புதுவகை ஆயுதமொன்றைக் கைகளில் எடுத்தார்கள். கற்களில் இருந்து பீரங்கிகள் வரையிலான ஆயுதங்கள் எல்லாவற்றையும் ...

Read More »

ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (14) முதல் மீள் அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச மற்றம் தனியார் நிறுவனங்களில் ஏற்கெனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது

Read More »

1.7 லட்சம் சீனா ஆதரவு கணக்குகளை அதிரடியாக நீக்கிய ட்விட்டர்

சீனாவுக்கு ஆதரவான 1 லட்சத்து 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன என்பதும் தெரியவந்துள்ளது. உலகமெங்கும் குறுகிய செய்திகளை பதிவிடுவதற்கு பயன்படும் சமூக வலைதளமாக ட்விட்டர் செயல்படுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த சமூக வலைதளம், அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. ஏறத்தாழ 33 கோடி பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன், சவுதி அரேபிய மன்னர் சல்மான், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ...

Read More »

வல்வையில் குண்டு வெடிப்பு ! இராணுவ அதிகாரி காயம்!

நெல்லியடி காவல் துறை  பிரிவுக்கு உட்பட்ட வல்லைவெளிப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் வெடிபொருள் என்று நம்பப்படும் மர்மப் பொதி ஒன்று வெடித்ததில் காயம் அடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் பொதி ஒன்றை விழுத்திவிட்டுச் சென்றிருக்கின்றார். அதனை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை ...

Read More »

வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம்! – சுகாஸ் அழைப்பு

கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து எதிர்ப்போம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம். இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகருமான சுகாஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; தமிழர்களுடைய தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கிலே முக்கியமான பகுதி கிழக்கு மாகாணமாகும். இவ் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளில் ஒன்றான தாயகக் கோட்பாட்டோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகக் கிழக்கு மாகாணம் ...

Read More »

இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால்……..

தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடாத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். ;அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது திடீரென பொங்கிய பாசம் தேர்தல் நெருங்குகின்றது தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் ...

Read More »

கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்: ஒரு இயக்கத்தின் வரலாறு

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டி ருக்கிறது. அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில் ஒரு வெள்ளையின போலீஸ்காரர் தனது முழங்காலால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தின் மேலே 8 நிமிடம் 46 நொடிகளுக்கு நின்றது அவரது உயிரைப் பறித்திருக்கிறது. இதனால், ‘கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்’ (Black Lives Matter – BLM) என்ற இயக்கம் மறுபடியும் தெருவில் இறங்கியும் சமூக வலைதளங்களிலும் போராட ஆரம்பித்திருக்கிறது. இனவெறியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ...

Read More »

வைரசால் ஒருவர் எளிதில் பாதிக்கப்படுவதற்கு, ரத்த வகை முக்கிய பங்கு

கொரோனா வைரசால் ஒருவர் எளிதில் பாதிக்கப்படுவதற்கு, ரத்த வகை முக்கிய பங்கு வகிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் ஏன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள்? மற்றவர்களுக்கு ஏன் குறைவான அறிகுறி உள்ளது? சிலர் ஏன் அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள்? இதற்கு விடை அந்த நபரின் ரத்த வகையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ...

Read More »

முள்ளிவாய்க்காலில் நடந்தது “திட்டமிட்ட இனப்படுகொலை”

அவுஸ்ரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹாக் மெக்டெர் மொட் அவர்கள் ,முள்ளிவாய்க்காலில் நடந்தது “திட்டமிட்ட இனப்படுகொலை “ என்று தனது கருத்தை நீதியின் பக்கம் நின்று பதிவு செய்துள்ளார் .இது சர்வதேச தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது . ஈழத்தில் அரங்கேறிய இன அழிப்பு குறித்து தமிழின அழிப்பு நினைவு நாளில் நீதியின் குரலாக துணிச்சலோடு கருத்துவெளியிட்டதனால் ஹாக் மெக்டெர் மொட் (Hugh McDermont ) அவர்களை எதிர்த்து சிறீலங்கா அரசின் ஆதரவுடன் அவுஸ்திரேலியா வாழ் சிங்களர்களால் அவர் அங்கத்துவம் ...

Read More »

இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு

60 அல்லது 65 வயதுக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலம் கொழும்பு 07 பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தொடர்பில் விவரங்கள் தெரியாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More »