செய்திமுரசு

ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்விலும் முழுமையான வீழ்ச்சி

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லை மூடல் நடவடிக்கையினால், 2019 வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்ட புலம்பெயர்வு எண்ணிக்கையை எட்டுவது சாத்தியமற்றதாகியுள்ளது என ஒரு குடியேற்ற வல்லுநர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்கள், நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெறாதவர்களுக்கு ஆஸ்திரேலிய எல்லை மூடப்படுவதாக கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்திருந்தார். இந்த தொடர் கட்டுப்பாட்டின் காரணமாக ஆஸ்திரேலியாவின் அனைத்து விதமான புலம்பெயர்விலும் முழுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த மே மாதம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ...

Read More »

வடக்கின் களம் யாருக்கு பலம்?

சற்றுத் தணிந்திருந்த கொரோனா மீண்டும் வெளிக்கிளம்பி நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள போதும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தீவிர தேர்தல் பிரசார யுத்தத்தில் களமிறங்கியுள்ளன . வழக்கம் போலவே இம்முறையும் சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம்,முஸ்லிம் இனவாதம் என்ற ஆயுதங்கள் மூலமே தேர்தல் பிரசார யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என்று கூறுவதை தவிர்த்து தமது எதிரிக்கட்சிகள் மீது வசைபாடும்,சேறுபூசும் ...

Read More »

வடமகாணத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவக்கூடிய நிலை

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமகாணத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவக்கூடிய ஏது நிலை உள்ளது. மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும். சமூக இடைவெளியினை பேணாதா காரணத்தால் இதன் தாக்கம் ஏற்படக்கூடிய நிலை உருவகலாம். இதனால் பொதுமக்கள் ஒன்று கூடுதல், தேவையற்ற பிரயாணங்களை தவிர்க்க வேண்டும். இதனை ...

Read More »

சிறிலங்கா படையினரும் புலனாய்வாளர்களும் வடக்கில் திட்டமிட்டு முட்டுக்கட்டை

பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் வடக்குமாகாணம் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினதும், வேட்பாளர்களினதும் தேர்தல் செயற்பாடுகளுக்கு திட்டமிட்ட வகையில் முட்டுக்கட்டடைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் அத்துடன் ஆளும் தரப்பு ஆதரவாக படையினரும், புலனாய்வுப்பிரிவினரும் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் அதேநேரம், தங்களது மக்கள் பிரசாரத்தினை தடுக்கும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் தாம் பிரசார நடவடிக்கைகளுக்கு செல்கின்றபோது பின்தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, தமிழ் மக்கள் ...

Read More »

கொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கணிசமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அமெரிக்கா, ...

Read More »

விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் தடை

  இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக நியுஸ் இன் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. கரும்புலிகளின் பாணியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் உட்பட விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து ஐக்கியநாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாகஇலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கமான பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கமான பயங்கரவாத விவகாரங்கள் ...

Read More »

புனிதமிழந்த கோஷங்கள்

அமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி ; சமாதானம் ; யுத்த நிறுத்தம் ; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்துவிட்டன. இப்பொழுதும் புனிதமிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள் ; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள் ; படைப் பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”. இது ஒரு யுத்த களத்தை பற்றிய சித்திரிப்பு. ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப துடிக்கும் நியூசிலாந்துவாசிகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள நியூசிலாந்துவாசிகள் நியூசிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட நியூசிலாந்துவாசிகளில் ஒருவரான Raymond Elise, ஜூன் 18ம் திகதியோ அல்லது அதை ஒட்டிய நாளிலோ நாடுகடத்தப்படுவோம் எனக் கூறப்பட்டதாகவும் ஆனால் கொரோனா சூழல் நாடுகடத்தலை தாமதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதனால் தாங்கள் எப்போது நியூசிலாந்துக்கு அனுப்பப்படுவோம் என்று அறிய முடியாத நிலையில் இவர்கள் தடுப்பு முகாமில் இருக்கின்றனர். நியூசிலாந்து அரசு இந்த ...

Read More »

அந்த படகு வீட்டில் ஒவ்வொரு இரவும் நரகமாகவே இருந்தது: சித்திரவதைக்கு உள்ளான அவுஸ்திரேலிய இளம்பெண்!

அவுஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார். தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார். கார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக ...

Read More »

சீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 140 பேர் பலி

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஹூபேய் மாகாணம் உள்பட சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அன்ஹுய், ஜிஅங்ஜூ, ஹுஜுயங் உள்ளிட்ட மாகாணங்களிலும் கனமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் சூழ்ந்துள்ளன. சாலைபோக்குவரத்து, ...

Read More »