செய்திமுரசு

சிறிலங்காவில் முதல் தடவையாக இரு பெண் விமானிகள் நியமிப்பு

திருகோணமலை சீனக்குடாவில்(China bay) உள்ள விமானப்படை அகடமியில் இன்று காலை சிறிலங்கா விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா  விமானப்படை அறிவித்துள்ளது.

Read More »

வடக்கில் மகாஜனா மாணவி முதலிடம்

நேற்று வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.மகாஜனாக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மகிசன் இருவரும் தலா 195 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இதேவேளை மகாஜனக் கல்லூரியிலிருந்து 36 பேர் சித்தி பெற்றுள்ளனர். வயாவிளான் சிறிவேலுப்பிள்ளை வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 12 மாணவர்கள் சித்தியடைந்தனர். வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அஸ்வினியா ...

Read More »

சீனா முன் அமெரிக்கா தோல்வி!

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் 39சதவீத பொருளாதார கட்டமைப்புகளை இந்த நாடுகள் உள்ளடக்கியுள்ளதால் உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியே ...

Read More »

இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை நீக்கம்

மேல்மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கும் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்குமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று (15) நள்ளிரவுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கருணா ஒரு ‘காமடி பீஸ்’ – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்தார். முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன்; அவரது பிறந்த நாளான இத் தினத்தில் அவர் தலைமையில் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு வில்லியம் ஆல்ட் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது இதில் கலந்து கொண்ட பின் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு இலச்சம் வேலை ...

Read More »

கமலாவோ விமலாவோ யார் வந்தாலும் ஒரு கட்டமைப்பு வேண்டுமே?

கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர் கமலாவின் பூர்வீகத்தை இந்தியாவில் இருந்து பெயர்த்து எடுத்து மானிப்பாய் வரை கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். வேறு சிலர் கமலா ஹாரிஸின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் வேரைக் கொண்ட பெண்ணாகிய ரோகிணி லக்ஷ்மி கொஸோக்லு  குறித்தும் பெருமைப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு கமலாவுக்கும் ரோகிணிக்கும் சொந்தம் கொண்டாடி கமலாவின் வருகையால் தமது அரசியல் வாழ்வில் ...

Read More »

கொழும்பு மாவட்டமே ஆபத்தானதாக காணப்படுகின்றது

மேல்மாகாணத்தில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் பரவல் காணப்படுகின்றது குறிப்பாக கொழும்பு மாநாகரசபை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆபத்து நிலவுகின்றது என தொற்றுநோயியல் வைத்தியர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபையும் புறநகர்பகுதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன கொழும்பிலும் கம்பஹாவிலும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஒப்பீட்டளவில் மேல்மாகாணமே மிகவும் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது

Read More »

நல்லுரில் ஒருவருக்கு இன்று கொரோனா

யாழ்ப்பாணத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 157 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர் கடந்த 26 ஆம் திகதி பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றதன் காரணமாக ...

Read More »

ஜோ பைடனை இலங்கை எப்படிச் சமாளிக்கும்?

அமெரிக்கா ஓர் உலகப் பேரரசு. அது தன் எதிர்காலத்தை நூற்றாண்டுக் கணக்கில் அல்லது ஆயிரமாண்டுக் கணக்கில் திட்டமிடும். எனவே அதன் வெளியுறவுக் கொள்கை; பாதுகாப்பு கொள்கை; பொருளாதாரக் கொள்கை போன்றன நூற்றாண்டுக் கணக்கிலேயே திட்டமிடப்படும். இவ்வாறு நூற்றாண்டுக் கணக்கில் திட்டமிடப்படும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு புதிய தலைவர் எடுத்த எடுப்பில் மாற்றிவிட முடியாது. ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அது சாத்தியம். அண்மையில் தெரண ஆங்கில ஊடகத்துக்கு இலங்கையின் வெளிவிவகார செயலரும் ஓய்வுபெற்ற வான்படைப் பிரதானியுமான ...

Read More »

எனது குளியல் அறையில் கமரா வைத்தனர்!

சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு சவுத்ரி சர்க்கரை ஆலையை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டனர் என மரியம் குடும்பம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.  ரூ.70 லட்சம் மதிப்பிலான பங்குகளும் மரியம் பேரில் பரிமாற்றம் செய்யப்பட்டன என புகார் எழுந்தது. இந்த வழக்கிற்காக ...

Read More »