எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர் முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்துவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல நூல்களை எழுதியவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.. நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »செய்திமுரசு
அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன!
ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன் கடந்த ஆண்டு தோல்வியுற்றது என்பதைக் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதா? உணவை ஓர் ஆயுதமாக எத்தனை தடவைகள் பயன்படுத்தலாம்? கடந்த ஆண்டு கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது அதிலிருந்து மாணவப்பிரதிநிதிகள் அவ்வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்பதைக் ...
Read More »தன் குழந்தையைக் காப்பாற்ற போராடிய அவுஸ்திரேலிய தாய்!
ஆலங்கட்டி மழையில் தன் குழந்தையைக் காப்பாற்ற தாய் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் புயல் தாக்கியது. அத்தோடு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மணிக்கு 144 கிமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியுள்ளது. குயின்ஸ்லேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியோனா சிம்ப்சன் என்பவர் புயலின்போது தன் குழந்தையுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடி உடைந்து குழந்தையுடன் ...
Read More »போர்க்காலத்திலும் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்தார்!-மைத்திரி
வடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு காடுகள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து பேசியபோதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் உள்ள காடுகளில் வடக்கு காடுகளே அடர்த்தி கூடியதாக காணப்படுகின்றது. அங்கு முப்பது வருடங்களாக போர் நடந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், காடுகளை அழியாமல் பாதுகாத்திருப்பதாகவும் மைத்திரி தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் பிறந்தநாளின்போது, கேக் வெட்டாமல் மரங்களை நடுங்கள் எனவும் மரங்களை மற்றவர்களு்ககு ...
Read More »இடைக்கால அரசாங்கம் உருவாகுவது சாத்தியமற்ற விடயம்!-ரஞ்சித் மத்தும
இடைக்கால அரசாங்கம் உருவாகுவது சாத்தியமற்ற விடயம் எனத் தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடும். அதுவரை கூட்டரசாங்கம் இணைந்தே செயற்படும் என்றார். மேலும் எதிர்தரப்பினர் தம்மை பாதுகாத்துக் கொள்ளவே இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனரே தவிர பொதுநல நோக்கம் ஏதும் கிடையாது. தற்போது கடந்த காலத்தில் இடம்பெற்ற பல பாரிய மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் பலர் காணப்படுகின்றனர். வெகுவிரைவில் ...
Read More »அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை மூடிவிடுக!-ஐநா
அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் பாரிய நோய் அபாயம் உள்ளதால் அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டுமென ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. யுஎன்எச்சீஆர் அமைப்பின் அவுஸ்திரேலியாவிற்கான பேச்சாளர் கதெரின் ஸ்டபெர்பீல்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதாரசேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். நவ்று முகாமில் கடந்த மாதம் பதின்ம வயது யுவதியொருவர் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள ஐநா அமைப்பின் பேச்சாளர் அவரை முகாமிலிருந்து வெளியேற்றவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் ...
Read More »குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு வானிலை அறிக்கை வாசித்த தொகுப்பாளர்!
மின்னெஸோடாவைச் சேர்ந்த வானியல் நிபுணரான சூசி மார்டின், சர்வதேச குழந்தை சுமக்கும் வாரத்தை ஆதரிக்கும் பொருட்டு, தொலைக்காட்சியில் தனது குழந்தையுடன் தோன்றி வானிலை அறிக்கை வாசித்துள்ளார். சூசி குழந்தையுடன் வானிலை அறிக்கை வாசித்த காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது. தன் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்ட சூசி, கைக்கடக்கமான உதவியாளர் என்று அந்தக் குழந்தையை அறிமுகம் செய்துவிட்டு தனது அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். இந்த காணொளியில் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் சூசியின் குழந்தைக்கும் பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். வேலையைச் செய்யும்போதே இப்படி குழந்தையைக் கட்டிக்கொள்வது தான் ...
Read More »விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா?
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட ...
Read More »யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் வரையான நடைப்பயணம்!
ஊடக அறிக்கை மனிதகுலவரலாற்றின் பரிணாமம் என்பது, காலத்திற்குக்காலம் அதன் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களை மதிக்கின்ற, அவற்றைப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் பெரும் அக்கறையோடும், அறிவார்ந்தும் செயல்படுவதன்மூலமாகவே, மனிதசமூகம் பாரிய வளர்ச்சிநிலையைக் கண்டிருக்கின்றது. உலகம் என்ற ஒற்றைச் சொல்லில் பல நாடுகளும், அந்நாடுகளின் தனித்துவமான இன அடையாளங்களுடன் வாழக்கூடிய இறையாண்மையுள்ள மக்களினதும் ஒன்றுபட்ட கூட்டாகவே அவரவர் உரிமைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இத்தகைய நிலைகளைச் சீர்தூக்கிப்பார்க்கின்ற, தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் ...
Read More »எல்லை நிர்ணய மீளாய்வு குழு அறிக்கை வெளியான பின்னரே தேர்தல்கள் குறித்து நிலைப்பாட்டுக்கு வர முடியும்!
தேர்தல் முறைமை குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என அதன் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். தலைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியும் எனவும் தெரிவித்தார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Read More »
Eelamurasu Australia Online News Portal