செய்திமுரசு

சஹ்ரானை கைது செய்ய 340 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுக்கப்பட்டன என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டதாக  முன்னாள் அரச புலனாய்வு தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபர் நிலந்த ஜயவர்தன  தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட ...

Read More »

ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஆஸ்திரேலியா

ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு பகுதி அரசியல் கட்சியாகவும், ஒரு பகுதி ஆயுதக் குழுவாகவும் மற்றொரு பகுதி லெபனானின் ஷியா சமூகத்திற்கு அடிப்படை சேவைகளை வழங்கும் இயக்கமாகவும் செயல்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின அனைத்து பிரிவுகளையும் பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. லெபனான் மீது கணிசமான அதிகாரம் செலுத்தி வரும் இந்த இயக்கத்தின் ஆயுதப் பிரிவுகள் மீதான தடையை நீட்டித்துள்ளது. ஈரான் ஆதரவு கொண்ட ஷியா குழுவானது, ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் உள்துறை மந்திரி கரன் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். ...

Read More »

கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேர் பலியாகலாம்

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், செக்குடியரசு, சுலோவாக்கியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல ஜெர்மனியிலும் நோய் தாக்குதல் பல ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டு ...

Read More »

மூத்த ஊடகவியலாளர் கானமயில்நாதன் காலமானார்

மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது  79ஆகும். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி பிறந்தார். உதயன் பத்திரிகை 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் கானமயில்நாதனும் ஒருவர். பிரான்ஸின் தலைநகரான ...

Read More »

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கெடுபிடிகள் தீவிரம்

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,    முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும்  பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச் சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மாவீரர் துயிலுமில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும்  பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான வீரமறவர்கள் நினைவாக வருடம் தோறும்  கார்த்திகை  மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள்  உலகமெங்கும் வாழும் தமிழ் உறவுகளால் உணர்வுபூர்வமாக  அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது கார்த்திகை  21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக  கடைபிடிக்கப்பட்டு ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல அனுமதி

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். இதன்படி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், விசா வைத்திருப்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். அவுஸ்திரேலியாவின் எல்லை கடந்த ஆண்டு மே மாதம் மூடப்பட்டது, ஆனால் ...

Read More »

கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல்

இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே அச்செய்தி. ஆனால், ஒவ்வொரு முறையும் வரவு செலவுத் திட்டத்தின் மீது, ஒரு நம்பிக்கையிருக்கும்; சில எதிர்பார்ப்புகள் இருக்கும். சாதாரண மக்களுக்கான சில திட்டங்கள் ஆறுதல் அளிக்கும். இம்முறை, சில அதிவிஷேசங்களோடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அவை, இலங்கையின் பொருளாதார அடிப்படையின் குறைகளின் பாற்பட்டவை. இலங்கையின் ...

Read More »

தடுப்பூசி போட்டுக்கொண்டோர் இன்று முதல் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா செல்லலாம்!

ஆஸ்திரேலியா – சிங்கப்பூர் இடையே மேற்கொள்ளப்பட்ட பயண ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூரிலிருந்து, இன்று முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஆஸ்திரேலியா(விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ்) வரலாம். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஆஸ்திரேலியா வருவதற்கு முன்னர், சிங்கப்பூர் பயணிகள் கோவிட் சோதனையை மேற்கொண்டு தமக்கு தொற்று இல்லையென்பதை நிரூபிக்க வேண்டும். இதனடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த விமானங்கள், சிட்னி மற்றும் மெல்பனில் இன்று தரையிறங்கியுள்ளன.

Read More »

சூடானில் அமைதி திரும்ப வாய்ப்பு

ஐ.நா., அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் வரைவு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக அதிகாரிகள் கூறினர். சூடான் நாட்டில் பொதுமக்கள்-ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சியை ராணுவம் கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியது. அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு ...

Read More »

’சுமந்திரனின் சட்டப்புலமை எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை’

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனத தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், அறைகளுக்குள் விளக்கேற்றி, படங்களை பிரசுரிப்பதை விடுத்து, பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் கூறினார். கிளிநொச்சி ஊடக மையத்தில், இன்று(21) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை மாவீரர் தினம் எனவும் அதேபோல மே 18ஆம் திகதி பொதுமக்களுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எனவும் தற்போது ஆட்சிக்கு ...

Read More »