செய்திமுரசு

நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்!

பெண் குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, தனது நீண்டநாள் காதலருடன் திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ளார். நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி, ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்தது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை அவர் உயர்த்தினார். அத்தேர்தலில் 46 இடங்களைக் கைப்பற்றிய தொழிலாளர் கட்சி, கூட்டணி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி!

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்ட 20 கிலோகிராம் போதைப்பொருள் அந்தப் பொட்டலத்தில் அடங்கியிருந்தது. அதன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மெல்பர்ன் நகரின் மற்றொரு பகுதியில் 21 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்தக் கைது நடவடிக்கையில் மேலும் சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Read More »

பேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன?

ஆர­வா­ர­மின்றி நாட்­டுக்குள் நுழைந்­துள்ள உலக பயங்­க­ர­வாதம், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் 253 அப்­பா­வி­களின் உயிர்­களை கொடூ­ர­மாகக் குடித்­தி­ருக்­கின்­றது. பயங்­க­ர­வா­தத்தின் இந்தப் பிர­வேசம் குறித்து சர்­வ­தேச உளவுத் தக­வல்­களின் மூலம் இலங்கை அர­சுக்கு எச்­ச­ரிக்கை செய்­யப்­பட்­டி­ருந்த போதிலும், அதனை நாட்டின் பாது­காப்­புத்­துறை தீவி­ர­மாகக் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ள­வில்லை. இந்­திய உளவுத் தக­வல்கள் மட்­டு­மல்­லாமல், உள்ளூர் உளவுத் தக­வல்­களும் கூடிய கால இடை­வெ­ளியில் பயங்­க­ர­வா­தி­களின் உரு­வாக்கம் குறித்தும், அவர்­களின் நோக்­கங்கள் குறித்தும் தக­வல்­களை வழங்­கி­ய­துடன் எதிர்­கால நிலை­மைகள் குறித்த எச்­ச­ரிக்­கை­யையும் விடுத்­தி­ருந்­தன. இந்த ...

Read More »

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை!

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர்  சாளம்பைக்குளத்தை சேர்ந்த  இம்திகா அஹலம் என அழைக்கப்படும் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன்  சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

கொழும்பை சுற்றியுள்ள பாலங்களை தகர்க்க திட்டம்!

கொழும்பிலுள்ள பாலங்களை தகர்ப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என காவல் துறையினரை மேற்கோள்காட்டி ஏஎவ்பீ செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைதுசெய்யப்படாமலிருக்கின்றனர் எனவும் காவல் துறையினu் குறிப்பிட்டுள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள பாலங்களை தகர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என்ற புலனாய்வு தகவல்களை தொடர்ந்து கொழும்பை சுற்றியுள்ள காவல் துறையினநிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் மேலதிக காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துமாறு கோரியுள்ளோம் என அதிகாரிகள் ஏஎவ்பீ செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர். ஆறுகளில் படகுகளை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினரை கோரியுள்ளதாகவும்காவல் ...

Read More »

மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம், பயணம் மேற்கொள்ளவும் தடை!

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும் பயணம் மேற்கொள்ள தடையும் விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்தது. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டதையடுத்து, அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடையையும் விதித்துள்ளது. பாகிஸ்தான் ...

Read More »

சஹ்ரானின் சகோதரன் வீட்டில் தற்கொலை அங்கி மீட்பு!

தற்கொலை செய்துகொள்ளப்பட்ட, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் ச​கோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து தற்கொலை அங்கி உட்பட பெருமளவு வெடிபொருள்கள், இன்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், ரிழ்வானின் மாமனார் மற்றம் மாமியார் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். சகோதரரான ரிழ்வான், சாய்ந்தமருது தற்கொலை குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டார். ரிழ்வானின் மனைவியும் பலியாகிவிட்டார். அவர்களுடைய காத்தான்குடி வீட்டிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. தற்கொலை அங்கி, அலைபேசிகள்-4, ஏ.ரி.எம்.அட்டைகள், வங்கி புத்தகம், மரணமடைந்த ரிழ்வான் தம்பதிகளின் நான்கு குழந்தைகளின் 4 ...

Read More »

அடிப்படைவாத கொள்கையால்  அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்!

பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய  பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய  செயற்பாடுகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  முன்னாள்  பாதுகாப்பு  செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ  தலைமையில் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கத்துவப்படுத்தி குழுவினை  நியமித்தார். இக்குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவரது உத்தியோகப்பூர்வ  இல்லத்தில் வைத்து  கையளிக்கப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ ...

Read More »

வௌ்ளை நிற பாவாடைகளை வைத்திருந்த இருவர் கைது!

திஹாரியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணஞ்செய்த வானொன்றிலிருந்து 28 வௌ்ளை நிற பாவாடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 41 மற்றும் 47 வயதுகளையுடையவர்களாவார். குறித்த இருவரையும் இன்று (02) நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் காவல் துறையினர்  தெரிவித்தனர்.  

Read More »

தேடுதல் வேட்டை தொடர்கிறது!- 160 பேர் கைது!

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்­போ­தைய தலைவர் எம்.வை.எம். தெளபீக் மெள­லவி, அந்த அமைப்பின் ஊடக செயலர் மொஹம்மட் லெப்பை அஹமட் பைரூஸ், பொரு­ளாளர் மொஹிதீன் பாவா மொஹம்மட் பைசர் மற்றும் சாய்ந்­த­ம­ருது பகு­தியில் பாது­காப்பு தரப்­பி­ன­ரு­ட­னான  மோதலில் கொல்­லப்­பட்ட நப­ரொ­ரு­வரின் மனைவி எனக் கரு­தப்­படும் பெண் ஆகி­யோரை எதிர்­வரும் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­மறி­யலில் வைக்க மட்­டக்­க­ளப்பு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. சந்­தேக நபர்­க­ளான நால்­வ­ரையும் கடந்த 28 ஆம் திகதி மாலை  கைது செய்த காத்­தான்­குடி பொலிசார் அவர்­களை 72 மணி நேர ...

Read More »