செய்திமுரசு

ஓமந்தையில் 7 மிதிவெடிகள் மீட்பு!

வவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணுக்கும் இடைப்பட்ட விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து இன்று காலை 7 மிதிவெடிகளை மீட்டுள்ளதாக ஓமந்தை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா ஓமந்தைப்பகுதியில் முன்னர் இராணுவத்தரப்பினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்கப்பகுதியான விளக்குவைத்தகுளம் சூனியப்பிரதேசப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலில் நேற்று முதல் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவுப்புணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் 7 மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன இதையடுத்து இத்தகவலை காவல் துறையால்  காணி உரிமையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

Read More »

கூட்டமைப்பும் பேரம் பேசலும் சாணக்கியமும்!

மீண்டும் ஒருமுறை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காப்பாற்றி இருக்கிறது. இது தொடர்பில், பரவலாகப் பிரதானமான இருவேறுபட்ட கருத்துகள், தமிழ் மக்களிடையே நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தவறி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்து, தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட தமிழ் மக்களிடமிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்து விமர்சித்துவரும், தீவிர தமிழ்த் தேசியவாதிகள் என்று ...

Read More »

பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கான்டிரியன் நகரில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கான்டிரியன் நகரில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர், பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன. ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பணம், காரை திருடி 900 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுமி-சிறுவர்கள்!

ஆஸ்திரேலியா நாட்டில் மீன் பிடிக்க செல்லும் ஆர்வத்தில் குடும்பத்தாருக்கு தெரியாமல் பணம் மற்றும் காரை திருடிச் சென்ற ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்களை 900 கிலோமீட்டர் தூரத்தில் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். ஆஸ்திரேலியா நாட்டில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாகனங்களை ஓட்டும் உரிமம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் கிரேஸ்மேர் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்கள் தங்களது குடும்பத்தாருக்கு தெரியாமல் வெகுதூரம் சென்று மீன்பிடிக்க திட்டமிட்டனர். அவர்களில் ஒருவர் தனது வீட்டில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு செல்வதாக கடிதம் ...

Read More »

ஐந்து மாதங்களில் புதிய அரசாங்கமொன்று உருவாகும் !

இன்னும் ஐந்து மாதங்களில், புதிய அரசாங்கமொன்று உருவாகும் என்று,  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நுவரெலியா வைத்தியசாலைக்கான புதியக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, இன்று (15) இடம்பெற்றபோது, அக்கட்டடத்தை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More »

கூட்டமைப்பு அரசுக்கு முண்டு கொடுக்கும் துரோகச் செயலை நிறுத்தவேண்டும்!

“கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலையின் ஒரு அப்பட்டமான வெளிப்பாடாகும்” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “சகல தமிழ் கட்சிகளும் எமது இனத்தின் எதிர்கால இருப்பு பெரும் ஆபத்தில் இருக்கின்றது என்பதை உணர்ந்து தமக்கு இடையிலான காழ்ப்புணர்வுகள் அரசியல் போட்டிகளை மறந்து ஒன்றுபட்டு முழுமையான “அரச எதிர்ப்பு” அரசியலை ...

Read More »

மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் புரிந்ததா?

சுகவீனமடைந்திருந்த பிள்ளையைப் பார்க்கச் சென்ற தந்தையை, சுட்டுக் கொல்வது தான், இராணுவம் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் முறையா?” என்று சில நாள்களுக்கு முன்னர், ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. ‘அக்மீமன உபானந்த வித்தியாலய’ என்ற பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், உதய பிரதீப்குமார என்பவர் பலியானதை அடுத்தே, மஹிந்த ராஜபக்‌ஷ இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். முன்னாள் கடற்படை சிப்பாயான பிரதீப்குமாரவின் பிள்ளை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.  அந்தப் பிள்ளைக்குச் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகப் பாடசாலையில் இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்தே, ...

Read More »

மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை காப்பாற்றியுள்ளது!

அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை  குறித்து எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியினர் மீது, மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  நிராகரித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் சேமசிங்க இதனைக் கூறியுள்ளார். அத்துடன், 2015ஆம் ஆண்டு பொய்யான விடயங்களை தெரிவித்து நல்லாட்சியை கொண்டுவந்து நாட்டை நாசப்படுத்த ஒன்று சேர்ந்த தரப்பினர் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக ஒன்றிணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ...

Read More »

பிரேரணை கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்படும் !

மரண தண்டனையை அமுல்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வாறான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்படும் என, கூறியுள்ளார். வளவ வலயத்தில் உள்ள மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி  உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இன்று (14) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

வங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் மரணம்!

வங்காளதேசம் நாட்டில் ராணுவ ஆட்சியை நடத்திய கடைசி சர்வாதிகாரி ஹுசைன் முகம்மது எர்ஷாத்(91) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்தியா துணை நின்றது. பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் போர் நடத்தி கிழக்கு பாகிஸ்தானை வங்காளதேசம் என்ற தனிநாடாக இந்தியா மலரச் செய்தது. அங்கு அதிபர் அப்துஸ் சர்தார் தலைமையில் நடைபெற்றுவந்த ஜனநாயக முறையிலான ஆட்சியை 1982-ம் ஆண்டில் ராணுவ புரட்சியின் மூலம் கவிழ்த்த ஹுசைன் முகம்மது எர்ஷாத், அந்நாட்டின் சர்வாதிகாரியாக மாறி, ஜனநாயகத்துக்கு ...

Read More »