செய்திமுரசு

கோட்டாவிடம் மஹிந்த முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை!

நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், “நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட கடந்த ஐந்து வருட காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக ...

Read More »

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும்!

சிறிலங்கா  அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் ...

Read More »

ராக்கிங் : தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து!

பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பேராசிரியர் ரவீந்திரநாத் இருந்த காலத்தில் ராக்கிங் தொடர்பாக ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் அதில் கலந்து கொண்டு ராக்கிங்கை எப்படி நிறுத்தலாம் என்பது குறித்து சிந்தித்தார்கள். அதன் போது ஒரு மூன்றாம் வருட மாணவன் எழுந்து ஆசிரியர்களை பார்த்து பின்வருமாறு கேட்டிருக்கிறார் “உங்களுடைய காலத்தில் ராக்கிங் செய்யாத யாராவது ஒருவர் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று. அங்கு கூடியிருந்த ஆசிரியர்களில் ஓர் இளம் விரிவுரையாளரைத் தவிர வேறு யாருமே அந்த மாணவருக்கு ...

Read More »

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: ஸ்டீவ் வாக் சொல்கிறார்!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2020-21 டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு உள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018-19 டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்திருந்தது. இதற்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு போட்டியை டே-நைட் டெஸ்டாக நடத்த விரும்பியது. இதற்கு இந்திய ...

Read More »

கொரோனா வைரஸ் – சீன அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சீன அதிபருக்கு எதிர்ப்புகள் வலுத்தவண்ணம் உள்ளது. சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதமே இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், அதன் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தினமும் உயிர்ப்பலி அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் சீன அதிபர் தலைமறைவாகி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் ...

Read More »

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு!

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன் (17) நிறைவடைகின்றது. அதற்கமைய இன்று மாலை 4 மணி வரை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 70 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதவை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே, சரியான விண்ணப்பங்களை இன்றைய தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளிக்க முடியும் என ஆணைக்குழு கேட்டுள்ளது. புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி ...

Read More »

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் விலகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” என்று, விழுமிய வகுப்பெடுக்கும் இந்தக் கூட்டமைப்பின் தலைமைகள், கூட்டமைப்பைத் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நம்பிக்கையிழந்த அகதி குடும்பம்: கனடாவில்……..!

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைகான கடும் போராட்டத்தை எதிர்கொண்டு அங்கு வாழ்வதற்கான நம்பிக்கையிழந்த பாலஸ்தீனிய அகதிகளுக்கு, கனடாவில் புதியதொரு வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கனடா அரசின் ஸ்பான்சர் முறையின் கீழ் அவர்களுக்கு அங்கு நிரந்தரமாக வசிக்க (Permanent Residency) இடமளிக்கப்பட்டுள்ளது. திமா அவரது கணவர் ஹனி மற்றும் அவர்களது குழந்தைக்கே இந்த புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. திமா எனும் பெண் குவைத்தில் பிறந்த நாடற்ற பாலஸ்தீனிய அகதி. அவரைப் போலவே நாடற்ற பாலஸ்தீனிய அகதியான ஹனியை ஈராக்கில் சந்தித்து அங்கிருந்து இருவரும் ஆஸ்திரேலியா நோக்கி பயணமாகியுள்ளனர். ஆஸ்திரேலியா ...

Read More »

யாழ். அரச அதிபராக மகேசன் கடமைகளை பொறுப்பேற்றார்!

யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று காலை கணபதிப்பிள்ளை மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றார். மட்டக்களப்பு மேலதிக அரச அதிபராகவும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி வகித்த கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக அவர் பதவி வகித்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் சுனாமி வீடமைப்புத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக ...

Read More »

அபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்!

உக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி அன்னா சாகிடோன் உயிரிழந்தார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தது. உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் அக்குழந்தையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறுமி 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். வெறும் 7 கிலோ எடை கொண்ட அவள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ...

Read More »