சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனுடன் அதிலிருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஹர்சன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ...
Read More »செய்திமுரசு
இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோய்!
இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோயாகும். இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது எளிதான விடயமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே தயவுசெய்து நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் குறித்து அரசியல்வாதிகள் கருத்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுபலசேனா இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முழு மூச்சுடன் செயற்படுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் அமைப்பிடமிருந்து இலங்கை தௌஹீத் அமைப்புகளுக்கு பெரும்பாலும் கட்டளைகள் கிடைக்கப்பபெற்றுள்ளது. கோவை ஐயூப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையில் மிக ...
Read More »ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல்தர வர்த்தகர்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாத போதும் நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளேன் என்று முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பினை அடுத்து ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டுக்காக எட்டு வருடங்கள் சேவையாற்றிருந்தேன். தற்போதும் நாட்டுக்காக சேவையாற்றுவதற்கு தயாராகவே உள்ளேன். இன, மத, மொழி, கட்சி பேதமின்றி ...
Read More »தற்கொலை தாக்குதல்! -தொலைபேசிகள் ஆராயப்படுகிறது!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் 86 பயங்கரவாத சந்தேக நபர்களின் கைத்தொலைபேசிகளும் தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாக சிரேஷ்ட காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களுக்கும் தடைசெய்யப்பட்ட தெளஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் மற்றும் அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் ஆகியோருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, இதுதொடர்பான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பல்வேறு தொலைத்தொடர்பு நிலையங்களில் இருந்து இதுகுறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் கூறினார். இதேவேளை, பயங்கரவாதி சஹ்ரானால் 8 சிம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவரது ...
Read More »இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
சவுதாம்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 12 ரன்னில் வீழ்த்தியது. சவுதம்டனில் நடைபெற்ற மற்றொரு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்தும் மோதியது. காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 43 ரன்னும், ஷான் மார்ஷ் 30 ...
Read More »வடகொரியா ஏவுகணை பரிசோதனை! எனக்கு இடையூறு இல்லை!
வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. இதனால் என்னுடைய நிர்வாகத்தில் ...
Read More »சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி என்ற வைத்தியர் கைது !
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை காவல் துறையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் 42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி எனவும் குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய முறையில் வருமானம் ஈட்டியமை தொடர்பிலேயே குறித்த வைத்தியர் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டள்ளதாக காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ...
Read More »காவல் துறை உத்தியோகத்தர் கொலை சம்பவம்; சந்தேகநபர்கள் 3 பேர் கைது !
மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதோடு , மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை எதிர்வரும் 11ஆம் திகதி தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சி.ஜ.டியினர் தெரிவித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற காவல் துறை உத்தியோகத்தர் கடமைமுடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் ...
Read More »அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!
ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது ...
Read More »மே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்!
போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்தமிழர் வாழும் நாடுகள் எங்கும் மே 18 நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவுகூரலின் சமூகப் பெறுமானம் என்ன என்ற கேள்வியை இப்போதாவது நாம் கேட்டாக வேண்டும். மே 18 நினைவுகூரல்கள், மெழுகுதிரி ஏற்றுதல், அஞ்சலி, நீதிக்கான கோரிக்கை, வீரப்பேச்சுக்கள் என்பவற்றுடன் முடிகின்றன. ஒரு மே, அடுத்த மே, அதற்கத்த மே என ஆண்டுகள் பத்து கடந்துவிட்டது. இப்போது மே18 ஆண்டு நாட்காட்டியில் சடங்குக்கு உரிய ஒரு தினம் மட்டுமே. பத்தாண்டுகளைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்குமிடத்து ...
Read More »