வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான நட்புணர்வு பெரும்பாலும் நன்றாக இருந்ததில்லை. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தும்போது தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு, எல்லையில் ராணுவ விமானங்களை பறக்க விட்டு வடகொரியாவை அச்சுறுத்தும். ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரிய அளவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதில்லை. இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையில் கூட ஈடுபட்டனர். ...
Read More »செய்திமுரசு
பயம் – ஆதரவற்ற ஊடகவியல்! -2020 உலக ஊடக சுதந்திர தினம்
இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ;மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டுவதற்காகவும் மே 3 ஆம் திகதி ஊடக சுதந்திர தினமாக ஐக்கிய நாடுகளால் 1993 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று 26 ஆவது உலக ஊடக சுதந்திரத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. பயம் – ஆதரவற்ற ஊடகவியல் எனும் தொனிப்பொருளில் 2020 ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, சுதந்திரமானதும் பல்தன்மையானதுமான ஊடகத்துறையை ஊக்குவித்தல் எனும் ...
Read More »அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர விசேட நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட விமானங்களை பயன்படுத்துவதற்கு இலங்கை ஏயார்லைன்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. அதன்படி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கு நான்கு விமானங்களை பயன்படுத்தவுள்ளது. அதன்படி 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 4 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 5 ஆம் திகதிகதி செவ்வாய்க்கிழமைகளில் குறித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமனங்கள் ...
Read More »ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த தடை விதிக்கவும்!
எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பின் 104 ஆவது சரத்துடன் இணைத்து வாசிக்கத்தக்கதாக 126 ஆம் ,17 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று தாக்கல் செய்ப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக் குழு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ; ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே. ...
Read More »கிம் உரத்தொழிற்சாலையை திறந்து வைத்தாராம்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று வடகொரியா. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் அந்நாட்டின் கிம் ஜாங் உன் (36) செயல்பட்டு வருகிறார். உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாத வடகொரியாவில் ஊடகங்கள் உள்பட அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிநாட்டு ஊரடங்கள் அந்நாட்டில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் எந்த ...
Read More »ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து !
ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் நிகழ்த்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்ட காவல் துறை தாக்குதல் நடத்திய நபரை கொன்றனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா பிராந்தியத்தின் தெற்கு ஹெட்லாண்ட் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிகவளாகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும், 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். ...
Read More »இலங்கையில் 105 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்படும்!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு வருகின்றது. அந்த 21 மாவட்டங்களிலும் நேற்று இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் திங்கட் கிழமை& அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர் அன்றைய தினம் முதல் இரவு 8.00 மணியிருந்து அதிகாலை 5.00 மணி வரையிலான 9 மணி நேரமே ஊரடங்கு அமுல் செய்யப்படும். எனினும் எதிர்வரும் 6 ஆம் திகதி புதன் கிழமை இரவு 8.00 மணி ...
Read More »ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது ஆஸ்திரேலியா
வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கும். சோபிக்காத வீரர்களை நீக்கும். இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது. அதேவேளையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லபுஸ்சேன்-ஐ ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா ...
Read More »கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா மிகப்பெரிய சாதனை – ஜின்பிங் பெருமிதம்
கொரோனாவுக்கு எதிரான போரில், சீனா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார். நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 862 ஆக உயர்ந்தது. புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை. அதனால், பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 633 ஆக நீடிக்கிறது. சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தொடர், கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால், அப்போது தள்ளி வைக்கப்பட்ட கூட்டத்தொடர், வருகிற 22-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More »வடகொரியாவின் புதிய தலைவர்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன்னின் அரசியல் வாரிசாக அவரது சகோதரியை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகர்வானது, வடகொரியாவின் அதி முக்கிய பொறுப்புக்கு கிம் யோ ஜாங் தெரிவாக உள்ளார் என்பதை உறுதி செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கிம் ஜாங்-ன் தந்தை மரணப்படுக்கையில் இருந்த காலகட்டத்தில், தற்போது கிம் யோ-வுக்கு அளிக்கப்பட்டுள்ள இதே பொறுப்பை கிம் ஜாங் வுன்னுக்கு உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு வழங்கியிருந்தனர். கிம் குடும்பத்தின் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் வடகொரிய தேசிய அமைச்சரவை கூடி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ...
Read More »