வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான நட்புணர்வு பெரும்பாலும் நன்றாக இருந்ததில்லை. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தும்போது தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு, எல்லையில் ராணுவ விமானங்களை பறக்க விட்டு வடகொரியாவை அச்சுறுத்தும்.
ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரிய அளவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதில்லை. இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையில் கூட ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று கொரிய எல்லையில் வடகொரியா வீரர்கள் குண்டுமழை பொழிந்தனர். துப்பாக்கியாலும், சிறிய வகை பீரங்கியாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத வடகொரியா, பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal