அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநில முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் தமிழ்த்தேசியபற்றாளர் திரு. சபேசன் சண்முகம் அவர்களின் புகழுடலுக்கான இறுதிவணக்க நிகழ்வு இன்று 01-06-2020 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: தமிழ்த்தேசியப்பற்றாளர் சபேசன் சண்முகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை உளமார ஏற்று, தாயக மக்களுக்கான விடுதலைப்பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயற்பட்டிருந்த தமிழ்த்தேசியபற்றாளர் சபேசன் சண்முகம் அவர்களின் இழப்பு ...
Read More »செய்திமுரசு
சிங்கங்களால் கடித்துக்குதறப்பட்ட அழகிய இளம்பெண் இவர்தான்: புகைப்படம் வெளியானது!
அவுஸ்திரேலிய வன விலங்குகள் பூங்காவில் சிங்கங்களால் கடித்துக்குதறப்பட்ட இளம்பெண் குறித்த விவரங்களும் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளன. அவரது பெயர் Jennifer Brown (35). அவுஸ்திரேலியாவின் North Nowraவிலுள்ள Shoalhaven உயிரியல் பூங்காவில், Jennifer சிங்கங்கள் இருக்கும் கெபியை சுத்தம் செய்யச் செல்லும்போது, அவர்மீது பாய்ந்து அவரை தாக்கிய சிங்கங்கள் அவரது தலை மற்றும் கழுத்தைக் கடித்துக் குதறியுள்ளன. சிங்கங்களைக் கையாள்வதில் நிபுணரான Jenniferஐ அந்த சிங்கங்களே கடித்துக்குதறியது ஏன் என்று தெரியவில்லை. அவரது சக ஊழியர்கள் இருவர் சமயோகிதமாக செயல்பட்டு அந்த சிங்கங்களை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். ...
Read More »அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு எவ்வளவு?
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர். குணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான பில்லை நீட்டினர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக ...
Read More »யாழ். நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம்
20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாசார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39ஆவது ஆண்டு நினைவுதினம், இன்று (01) யாழ். நூலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்படட போது படுகொலை செய்யப்படடவர்களுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் பதில் முதல்வர் தலைமையில் நூலக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலும் நூலக நுழைவாயிலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. ...
Read More »இலங்கையில் 11ஆவது மரணம் பதிவானது
கொரோனா வைரஸ் தொற்றால் மற்றுமொருவர் உயிரழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Read More »யாழ்,நூலகம் எரிக்கப்பட்ட 39 ம் ஆண்டின் நினைவுகள்
தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 39 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு ...
Read More »ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது – ஒரே நாளில் 138 பேர் பலி
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.72 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 ...
Read More »பேரபாயத்தை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள்
1958ஆம் ஆண்டின் முற்பகுதியில், அம்பாறைக்கு அருகிலுள்ள குளமொன்றின் அணைக்கட்டில், ‘புல்டோசர்’ இயந்திரமொன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார், சிங்கள இனத்தைச் சேர்ந்த சாரதி ஒருவர். புல்டோசரில் கற்றூண் ஒன்று சிக்குப்படுகின்றது. அப்போது, அங்கு பணியிலிருந்த தமிழ் மேற்பார்வையாளர், அக்கற்றூணைக் குளத்துக்குள் போடும்படி, கூறுகிறார். சிலநாள்களின் பின்னர், அந்தக் கற்றூண், அம்பாறையில் உள்ள கல்லோயா அபிவிருத்திச் சபையின் அலுவலகத்துக்கு முன்னால், மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. காரணம், அந்தக் கற்றூணில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்ட சாசனம் காணப்பட்டது. அதில், குளத்துநீரை நீர்ப்பாசனத்துக்காகப் பங்கிடுவது தொடர்பான விதிகள் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லோயாப் பிரதேசம், சிங்கள ...
Read More »வாழைச்சேனையில் மோட்டர் குண்டு மீட்பு
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில், பாவிக்க முடியாத நிலையில், கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டொன்று, இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை காவல் துறையினர் தெரிவித்தனர் வாழைச்சேனை, குறிஞ்சிமலை வீதியில், மணல் குவிக்கப்படும் மண் யாட் பகுதியில் குறித்த மோட்டர் குண்டு இருப்பதாக காவல் துறைக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர், காவல் துறையினர் விரைந்து, மேற்படி மோட்டர் குண்டை மீட்டு, எடுத்துச் சென்றுள்ளனர்.
Read More »அமரர் ஆறுமுகனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமானது. அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் மதியம் 02 மணிக்கு கொட்டகலையிலிருந்து ஹட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வினை அடுத்து, பலர் இரங்கல் உரையாற்றினர். இதனையடுத்து, இந்தது சமய முறைப்படி இறுதி சடங்குகள் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இறுதிக்கிரியைகளை அடுத்து, அக்கினியுடன் சங்கமமாகியது.
Read More »