மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில், பாவிக்க முடியாத நிலையில், கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டொன்று, இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை காவல் துறையினர் தெரிவித்தனர்
வாழைச்சேனை, குறிஞ்சிமலை வீதியில், மணல் குவிக்கப்படும் மண் யாட் பகுதியில் குறித்த மோட்டர் குண்டு இருப்பதாக காவல் துறைக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர், காவல் துறையினர் விரைந்து, மேற்படி மோட்டர் குண்டை மீட்டு, எடுத்துச் சென்றுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal