செய்திமுரசு

ஆஸ்திரேலியாவில் மாறிக்கொண்டே இருக்கும் குடிவரவு விதிகள்?

“இப்போது ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா பெற விண்ணப்பிப்பது சாதாரணமான காரியமல்ல. குடிவரவு விதிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. அதுவும் ஒரு விண்ணப்பப் பணிகளுக்கே இடையிலேயே அந்த மாற்றம் நிகழ்கின்றது. ஒரு முறை விண்ணப்பிக்க தகுதியான நபர், அடுத்த முறை தகுதியற்றவராக இருக்கிறார்,” எனத் தெரிவித்திருக்கிறார் Melanie Macfarlane எனும் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு  முகவர்.

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்கின்றது இலங்கை அணி!

இலங்கை கிரிக்கட் அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய அணியின் 2021 – 2022ஆம் பருவகாலத்துக்கான போட்டித் தொடர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக 5 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு அவுஸ்ரேலிய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி அடுத்த வருடம் ஃபெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதா?

சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என அந்நாடு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் முதியவர், இணைநோய் அல்லாதோர் மட்டுமல்லாமல் இளம்வயதினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, நோயின் தீவிரம் கருதி பல நாடுகள் இந்தியாவிற்கான விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்துள்ளது. தற்போது இந்தியாவிலும் குழந்தைகளிடையே கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிங்கப்பூரில் குழந்தைகளிடம் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியாவில் காணப்படும் பி.1.617.2 வகை கொரோனா ...

Read More »

சிறைக்கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சருக்கு பிரேமலால் விளக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சருக்கு விளக்கமளித்தார். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இரத்தினபுரி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறி த்து சுகாதார அமைச்சருக்கு விளக்கமளித்தார்.   சிறைக் கைதிகளுக்கு மிக விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும்  கைதிகளுக்கிடையிலான இடைவெளியைப் பராமரிக்க சரியான முறையை ...

Read More »

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்! தமிழீழம் காக்க கட்சி, சாதி, மதம் கடந்து ஒன்றுபடுவோம்! என மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழர்களின் தாகமான தமிழீழ தாயகத்தை அடையும் நோக்கில் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள். இனப்படுகொலை நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆன பின்பும் தமிழர்களுக்கான நீதி கானல்நீராகவே உள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களுக்கான நீதி என கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், இனப்படுகொலையாளர்களை காப்பாற்றும் முயற்சியாகவே நீடிக்கிறது. தமிழீழ விடுதலைப் ...

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1015 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1015 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் 34 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 20 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 மேமாதம் 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

Read More »

நந்திக்கடலில் நினைவேந்தல்….முள்ளிவாய்க்கால் பிரகடனம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான சுடர் ஏற்பட்டு விடுதலைப் பயணத்தில் உயிர் துறந்த அத்துணை உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. போரின் வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் முல்லை மண், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதோடு, முப்படையினரினதும், பொலிஸாரினதும், புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பு வளையத்திற்குள் நேற்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்திலும், ...

Read More »

தடைகளை தாண்டி சிவாஜிலிங்கம் நந்திக்கடலில் அஞ்சலி !

யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி இன்று (18.05.2021) அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட தரப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை நந்திக்கடலில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பிரதேசங்கள் முழுமையான இராணுவ வலயங்களாக்கப்பட்டு, பெருமளவு இராணுவம் ,கடற்படை புலனாய்வாளர்கள் காவல் துறை  குவிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.கே.சிவாஜிலிங்கம், ...

Read More »

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி துரைரத்னசிங்கம் காலமானார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்னசிங்கம் காலமாகியுள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 80 ஆவது வயதில் இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

ஒரு கனத்த இதயங்களோடு தான் இந்த நினைவு கூரலை நாங்கள் சந்திக்கின்றோம்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவுகூர்வதை தடுக்கின்ற இக்கட்டான நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவரும், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவருமான, அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முப்பது ஆண்டு காலப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தம் இரண்டு ஆண்டுகளை, அதாவது பன்னிரண்டு ஆண்டுகளை கடந்து போகிற நிலையிலே, முள்ளிவாய்க்கால் பகுதியிலும் அதை அண்டிய பகுதிகளிலும், இறுதிப்போர் காலங்களிலே ...

Read More »