சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என அந்நாடு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் முதியவர், இணைநோய் அல்லாதோர் மட்டுமல்லாமல் இளம்வயதினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, நோயின் தீவிரம் கருதி பல நாடுகள் இந்தியாவிற்கான விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்துள்ளது.
தற்போது இந்தியாவிலும் குழந்தைகளிடையே கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சிங்கப்பூரில் குழந்தைகளிடம் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியாவில் காணப்படும் பி.1.617.2 வகை கொரோனா சிங்கப்பூரிலும் பரவி இருப்பதாக அந்நாடு நேற்று தெரிவித்தது.
ஆனால், சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக நேற்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலும் உடனடியாக வெளியிட்ட டுவிட் பதிவில், சிங்கப்பூர் உடனான விமான சேவைகளை உடனடியாக மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும் என்றார்.
மேலும், சிங்கப்பூரில் சமீபத்திய வாரங்களில் குழந்தைகள் உள்பட பலருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளில் பி .1.617.2 புதிய வகை தொற்று பாதிப்பு உள்ளது என்பதை பைலோஜெனடிக் சோதனை காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.