நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறி த்து சுகாதார அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
சிறைக் கைதிகளுக்கு மிக விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் கைதிகளுக்கிடையிலான இடைவெளியைப் பராமரிக்க சரியான முறையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரேமலால் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக சிறைக் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal